கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மே 4 ஆம் தேதியில் இருந்து ஜூன் 20 ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
கோடை விடுமுறை:
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தவும் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இந்தியாவில் 1-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே நடத்த திட்டமிடபட்டிருந்த திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த வருடம் மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
இந்த நிலையில் தற்போது பொது தேர்வுகள் நடைபெறும் என்று மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து மத்திய கல்வி துறை கட்டுப்பாட்டில் செயல்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஆண்டு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. பொதுத்தேர்வு மாணவர்களுக்கு மட்டும், இரண்டாம் பருவ தேர்வுகள் நடந்து வருகின்றன. மற்ற மாணவர்களுக்கு, புதிய கல்வி ஆண்டு வகுப்புகளும் தொடங்கி விட்டன.
இதனை தொடர்ந்து, அந்த பள்ளிகளுக்கு நாளை முதல் தொடங்கி ஜூன் 20 ஆம் தேதி வரை கோடை விடுமுறை என்று கே.வி.சங்கதன் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர்களுக்கு 48 நாட்களுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், தசரா பண்டிகையை ஒட்டி, அக் 3 முதல் 12 வரையிலும், புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் தினங்களை கொண்டாட டிச. 22 முதல், 2023 ஜன.1 வரை விடுமுறை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.