சின்னத்திரை பிரபலம் ஆலியா மானசா & சஞ்சீவ் வீட்டில் விசேஷம் – வைரலாகும் வீடியோ!

0
சின்னத்திரை பிரபலம் ஆலியா மானசா & சஞ்சீவ் வீட்டில் விசேஷம் - வைரலாகும் வீடியோ!
சின்னத்திரை பிரபலம் ஆலியா மானசா & சஞ்சீவ் வீட்டில் விசேஷம் - வைரலாகும் வீடியோ!
சின்னத்திரை பிரபலம் ஆலியா மானசா & சஞ்சீவ் வீட்டில் விசேஷம் – வைரலாகும் வீடியோ!

தமிழ் சின்னத்திரை தம்பதிகளான ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் வீட்டில் ஒரு விசேஷம் நடைபெற்று உள்ளது. அந்த விசேஷம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ:

மக்கள் விரும்பும் நட்சத்திர தம்பதிகளாக நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆலியா மானசா வலம் வருகிறார்கள். விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் ரீல் ஜோடியாக பயணத்தை தொடங்கிய இவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசாவிற்கு, ஒரு பெண், ஒரு ஆண் என 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் 2வது குழந்தையான அர்ஷ் பிறந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே ஆகிறது. தன்னுடைய இரண்டாவது பிரசவத்திற்காக, ராஜா ராணி2 சீரியலில் இருந்து ஆலியா மானசா விலகினார். மேலும் தற்போது குழந்தைகளை கவனித்து கொள்வதில் பிசியாக உள்ளார்.

தினமும் ரூ.7 டெபாசிட் செய்தால் மாதம் ரூ.60,000 – சிறப்பான ஓய்வூதிய திட்டம்! முழு விபரங்கள் இதோ!

இதையடுத்து சன் டிவி கயல் சீரியலில், சஞ்சீவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் சஞ்சீவும், ஆலியாவும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். மேலும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகின்றனர். இந்த சேனலில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள், குடும்ப நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், டிராவல் வ்லாக் என பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சஞ்சீவின் குடும்பத்தினர் ஒருவருக்கு நிச்சயதார்த்த விழா நடைபெற்றிருக்கிறது.

இந்த விழாவில் சஞ்சீவ், அவரது அம்மா, தம்பி, நடிகை ஆலியா மானசா, ஐலா என குடும்பமாக சேர்ந்து பங்கு பெற்றுள்ளார்.அந்த வகையில் முஸ்லிம் முறைப்படி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த விழாவை வீடியோவாக எடுத்து அதை யூடியூப் சேனலில் சஞ்சீவ் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவில் ஆலியா மற்றும் ஐலா பாப்பாவின் குறும்புகள் , குடும்ப உறவுகளின் அறிமுகம், சாப்பாடு, விருந்து என பல விஷயங்கள் இடம் பிடித்திருந்தது.. மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஆலியா , மீண்டும் சீரியலில் எப்போது என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!