CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நீடிக்கும் குழப்பம் – உயர்கல்வி சேர்க்கை பாதிக்குமா?

1
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நீடிக்கும் குழப்பம் - உயர்கல்வி சேர்க்கை பாதிக்குமா?
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நீடிக்கும் குழப்பம் - உயர்கல்வி சேர்க்கை பாதிக்குமா?
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நீடிக்கும் குழப்பம் – உயர்கல்வி சேர்க்கை பாதிக்குமா?

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதால் தேர்வு எப்போது நடக்கும் என்பது குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

CBSE பொதுத்தேர்வு:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மே 4ம் தேதி தொடங்க இருந்த மத்திய இடைநிலை கல்வி வாரிய பொதுத்தேர்வுகளில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், 12ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டது. கொரோனா சூழல் நிலைமை சரியான பிறகு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மருத்துவ கல்லூரி டீன்கள் 8 பேர் இடமாற்றம் – சுகாதாரத்துறை செயலர் உத்தரவு!!

தேர்வு அறிவிப்பு குறித்து மாணவர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், பல தரப்புகளில் இருந்தும் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்வதற்கும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மே 14ம் தேதி சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படவில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அறிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு காலம் தள்ளிப்போகும் காரணத்தால் மாணவர்களின் உயர்கல்விக்கான சேர்க்கை பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. 2021 12ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுக்கு 10.9 லட்சம் மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். பல மாணவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க தேவையான கால அவகாசம் இல்லாமல் இதனால் பாதிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

தேர்வை ரத்து செய்து முந்தைய மதிப்பெண்களின் மூலம் மதிப்பீடு செய்வது, பல மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்றும், அடிப்படை மதிப்பெண்களின் மூலம் மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள நல்ல கல்லூரிகளில் சேருவது கடினம் என்றும் கல்வி வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Only if we are alive …there will be a mark for graduation…pls understand that…. graduation not much important that life….if one is died it is number for the country but a great lose to their family and their society…pls have a note…#cancellation is best.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!