LIVE Update : TN Budget 2023 || அட்டகாசமான அறிவிப்புகளுடன் வெளியீடு – என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!

0
LIVE Update : TN Budget 2023 || அட்டகாசமான அறிவிப்புகளுடன் வெளியீடு – என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!
LIVE Update : TN Budget 2023 || அட்டகாசமான அறிவிப்புகளுடன் வெளியீடு – என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!
LIVE Update : TN Budget 2023 || அட்டகாசமான அறிவிப்புகளுடன் வெளியீடு – என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு (2023-24) நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அட்டகாசமான அறிவிப்புகள் இடம்பெற இருக்கிறது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.

TN Budget 2023:

தமிழகத்தில் நடப்பு நிதியாண்டுக்கான சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 9ம் தேதி அன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, இன்று 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் காகிதமில்லா முறையில் இ-பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார்.

Live Update:

காலை 12.20 – அரசு பேருந்துகள் வாங்க ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு:

  • புதிய பேருந்துகள் வாங்கவும், 500 புதிய பேருந்துகளை புதுப்பிக்கவும் ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக ரூ. 8,500 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
  • மதுரை திருமங்கலம், ஒத்தக்கடை பகுதியை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் வரவுள்ளது.
  • மதுரை மையப்பகுதியில் நிலத்துக்கடியில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

காலை 12.15 – மகளிர் இலவச பயண திட்டம் ரூ . 2,800 கோடி ஒதுக்கீடு:

  • மகளிர் இலவச பயணத்திற்கு ரூ. 2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 9000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தஞ்சை மாவட்டத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
  • முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழக போக்குவரத்தின் கீழ் புதிதாக 1000 பேருந்துகள் வாங்கப்படும்.

காலை 12.00 – குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத்தொகை:

  • தமிழக குடும்ப தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் வரும் நிதியாண்டு முதல் அமல்படுத்தப்படும்.
  • அறிஞர் அண்ணா பிறந்த தினமான செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டதிற்காக தமிழக அரசு ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

காலை 11.55 – வீடு கட்ட முன்பணம் ரூ. 50 லட்சம்

  • ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சியில் தோல் பொருள் தொழிற்சாலை அமைக்கப்படும்.
  • அரசு பணியாளர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ. 50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வழிகாட்டி மதிப்பை திருத்த குழு அமைக்கப்படும்.
  • பத்திரப்பதிவு கட்டணம் 4 % – ல் இருந்து 2% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • வெள்ளம், கனமழையை எதிர்கொள்ள தேவையான வெள்ள தடுப்பு பணியை மேற்கொள்ள ரூ . 320 கோடி ஒதுக்கீடு

காலை. 11.50 – சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டம் ரூ. 53,46 கோடி ஒதுக்கீடு

  • தகவல் தொழில்நுட்பத்தின் 2 ம் கட்டமாக சென்னை, கோவை, ஓசூரில் TNTECH CITY அமைக்கப்படும்
  • நாகூர் தர்காவை மேம்படுத்த ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்திற்காக ரூ. 53,46 கோடி நிதி ஒதுக்கீடு
  • கண்ணகி நகர், பெரும்பாக்கம் நாவலூர் அத்திப்பட்டியில் ரூ. 20 கோடியில் விளையாட்டு பொழுதுப்போக்கு மையம் தொடங்கப்படும்.
  • சேலத்தில் ரூ. 880 கோடியில் 119 ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 2030 – குள் கூடுதலாக 14,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்காக ரூ. 77,000 கோடியில் புதிய திட்டம்

காலை 11.45 – நலத்திட்டங்களுக்கு ரூ.389 கோடி ஒதுக்கீடு:

  • மீனவர் நலத்திட்டங்களுக்காக ரூ. 389 கோடி நிதி ஒதுக்கீடு
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ரூ. 18,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இணைய வசதியை கொண்டு செல்லும் கண்ணாடி இழை தொடர்புக்கு ரூ. 400 கோடி ஒதுக்கீடு
  • சென்னையில் ரூ. 320 கோடியில் வெள்ளத்தடுப்பு நீர் மேம்பட்டு பணிகள்
  • வட சென்னை வளர்ச்சி திட்ட பணிகள் ரூ. 1,000 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அண்ணா சாலையில் ரூ. 621 கோடி ரூபாய் செலவில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 மேம்பாலங்கள் கட்டப்படும்.
  • சென்னை புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ. 1,847 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ . 19,465 கோடி ஒதுக்கீடு

காலை 11. 40 பொது விநியோக திட்டம் ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு

  • பொது விநியோக திட்டத்தின் உணவு மானியத்திற்கு ரூ. 10,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலை 11.35 – மகளிர் சுய உதவிக்குழு கடன் ரூ, 30,000 கோடி

  • மகளிர் சுய உதவி குழுகளுக்கு ரூ. 30,000 கோடி கடன் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காலை 11.25 – மிதிவண்டி திட்டம் ரூ. 305 கோடி ஒதுக்கீடு

  • தமிழக பள்ளி மானவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ. 305 கோடி நிதி ஒதுக்கீடு

காலை 11. 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,444 கோடி ஒதுக்கீடு

  • கடுமையான பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ. 2000 ஆக உயர்வு.
  • மாற்றுத்திறனாளி உதவித்தொகை திட்டத்திற்காக ரூ. 1,444 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலை 11.10 – ரூ . 3,513 கோடி ஒதுக்கீடு

  • தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்கு ரூ. 3,513 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளர்களுக்கான ஓய்வூதியம் 1,500 ஆக உயர்த்தப்படும்.
  • அடையாறு ஆற்றை தூய்மைபடுத்தி கரையோரங்களில் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்படும்.
  • 1,424 கீ.மீ மண் சாலைகளை தார் சாலைகளாக மாற்ற ரூ. 1,211 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூ. 2000 கோடியில் 5,140 கீ. மீ சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.

காலை 11. 05 – மானியத்தொகை:

  • கோவை நகரை மேம்படுத்த எழில்மிகு கோவை என்ற வளர்ச்சி திட்டம் உருவாக்கப்படும்.
  • கோவையில் ரூ. 172 கோடி செலவில் செம்மொழி பூங்கா அமைக்கப்டும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வாங்க மானியம் வழங்கப்படும்.
  • ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோபி செட்டிபாளையம் வனப்பகுதியில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம் 80,000 ஹெக்டேரில் அமைக்கப்படும்.
  • மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் ரூ. 25 கோடி செலவில் அமைக்கப்படும்.
  • ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் ரூ. 7.145 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • கடல் அரிப்பை தடுக்கவும், காற்று மாசுபாட்டை குறைக்கவும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும்.
  • தமிழகத்தில் கிராம பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் ஊரணிகள் ஆகியவற்றை புதுப்பிக்க ரூ. 800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.55 – காலை உணவு திட்டம் ரூ. 500 கோடி ஒதுக்கீடு

  • தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்த ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 1,543 பள்ளிகளில் மாணவர்கள் வருகை 1,319 ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 30,122 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  • உயர்கல்வி துறைக்கு ரூ. 1,967 கோடி ஒதுக்கீடு
  • உயர்கல்விக்காக கொண்டு வரப்பட்டுள்ள புதுமை பெண் திட்டத்தால் தற்போது கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 29% அதிகரித்துள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • தற்போது புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2.2 லட்சம் மாணவிகள் மாதம் ரூ. 1000 உதவித்தொகை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10.45 – நான் முதல்வன் திட்டம் – ரூ. 50 கோடி

  • நான் முதல்வர் திட்டத்திற்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் அதி நவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும்.
  • ஜவர்ஹலால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்த ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காலை 10.35 – பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி நிதி ஒதுக்கீடு:

  • குடிமை பணித்தேர்வு எழுத விரும்பும் 1,000 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும் இவர்களுக்கு மாதம் ரூ. 7,000 வீதம் 10 மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
  • கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ. 80 கோடியில் அதி நவீன திறன் மேம்பட்டு மையம் அமைக்கப்படும்.
  • 54 பாலிடெக்னிக்குகள் திறன் மிகு பயிற்சி நிலையங்களாக மாற்றப்படும். இதற்காக ரூ. 2,783 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படும்.
  • பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 40,299 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் புதிய பள்ளிகள் கட்ட ரூ. 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தற்போது நடைமுறையில் இருந்து வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் ரூ. 110 கோடி செலவில் 4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

காலை 10.20 – கருணைத்தொகை ரூ. 40 லட்சம்

  • தமிழக படைவீரர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணைத்தொகை ரூ.40 லட்சம் என இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
  • தமிழக வருவாய் பற்றாக்குறையை ரூ.30,000 கோடியாக குறைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

  • அம்பேத்கரின் படைப்புகள் முழுவதுமாக தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்படும் என அறிவித்துள்ளார்.

  • குடிமைப்பணி தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு தயாராக உதவி தொகையாக ரூ.25000  வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

காலை 10. 15 – கலைஞர் நூலகம்

  • மதுரை மாநகராட்சியில் கலைஞர் நூலகம் வருகிற ஜூன் மாதத்தில் திறக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்த நூலகம் மக்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 3.5 லட்சம் நூல்களுடன் செயல்படும்.
  • தமிழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து வகையான பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  • மேலும் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகின்ற ‘காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்’ தற்போது 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!