சாமானிய மக்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – நிர்மலா சீதாராமனின் சூப்பரான அறிவிப்பு!!
2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது சாமானிய மக்களுக்கு பயனுள்ள வகையில் பல சலுகைகளை நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
பட்ஜெட்:
நாட்டில் 2023-24ம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதை தொடர்ந்து, இன்று (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் தற்போது அதிகரித்து வரும் பண வீக்கத்தை சாமானிய மக்கள் எதிர்கொள்வதற்கான பல்வேறு சலுகைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
டெல்லி அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் – 6000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமனம்!!
அதன்படி இந்த பட்ஜெட்டில் சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், எலக்ட்ரிக் வாகன பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் – அயன் மூலப் பொருட்களுக்கான வரியும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில மொபைல் உதிரி பாகங்களுக்கு இறக்குமதி செய்வதற்கான சுங்க வரியும் குறைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% என நிர்ணயம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக டிவி, செல்போன்களின் விலை அதிரடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் வெளியான இந்த அறிவிப்பால் சாமானிய மக்கள் குஷியில் உள்ளனர்.