BSNL நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கான வேலை – 55 காலிப்பணியிடங்கள்..!
BSNL நிறுவனத்திலிருந்து தற்போது காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் Diploma Apprentice பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
BSNL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- BSNL நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Diploma Apprentice பணிக்கு 55 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
- அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் Diploma course in Engineering/ Technology முடித்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 25 வயதுக்கு மிகாமல் இருப்பது கட்டாயமாகும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.8,000/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- நேர்காணல் அல்லது கல்வி தகுதி அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
BSNL விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க 29.12.2021 ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.