திருப்பதியில் செப்.27 முதல் பிரம்மோற்சவ விழா – இலவச தரிசனத்திற்கு முன்னுரிமை!

0
திருப்பதியில் செப்.27 முதல் பிரம்மோற்சவ விழா - இலவச தரிசனத்திற்கு முன்னுரிமை!
திருப்பதியில் செப்.27 முதல் பிரம்மோற்சவ விழா - இலவச தரிசனத்திற்கு முன்னுரிமை!
திருப்பதியில் செப்.27 முதல் பிரம்மோற்சவ விழா – இலவச தரிசனத்திற்கு முன்னுரிமை!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் செப்டம்பர் 27ம் தேதி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ விழா:

திருப்பதியில் வரும் செப்டம்பர் 7ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அக்டோபர் மாதம் 5ம் தேதி வரை இந்த பிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழகம் மற்றும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து துறை சார்பில் 300 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த விழாவின் போது இலவச தரிசனத்தில் செல்லும் சாதாரணப் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக திருமலையில் பிரமோற்சவ விழா கோயில் வாளகத்திலேயே நடத்தப்பட்டது. அதனால் வாகன சேவை நடைபெறவில்லை. தற்போது 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாட வீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகனச் சேவை உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவில் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post Office இல் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

இந்த பிரம்மோற்சவ விழா நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், வயது முதிர்ந்தவர்களுக்கான தரிசனம், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளின் பெற்றோருக்கான தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்ஜித சேவைகள் தரிசனம் ரூ.300 கட்டண தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்கள் பிற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசனம் என அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!