Post Office இல் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

0
Post Office இல் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
Post Office இல் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள் - முழு விவரங்கள் இதோ!
Post Office இல் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள் – முழு விவரங்கள் இதோ!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. இதில் தற்போது பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக சேமிக்கப்படும் திட்டங்கள் குறித்த முழு விவரத்தை பற்றி பார்ப்போம். இதில் தங்களுக்கு தகுந்த சேமிப்பு திட்டத்தை தேர்வு செய்து சேமிக்கலாம்.

சேமிப்பு திட்டம்

இந்திய அஞ்சல் துறையில் சேமிப்பதன் மூலமாக வங்கிகளை காட்டிலும் இரட்டிப்பு மடங்கு லாபம் பெற முடிகிறது. அத்துடன் குறைந்த தொகையில் முதலீடு செய்வதால் சாமானிய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து தற்போது பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்கு உகந்த திட்டங்களை பற்றி விரிவாக பார்ப்போம். இதில் முதலாவதாக தபால் அலுவலக சேமிப்பு கணக்கு என்ற திட்டத்தில் சேமித்தால் ஆண்டுக்கு 4% வட்டி விகிதம் கிடைக்கிறது. இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் இதில் ரூ.50-ஐ இருப்புத்தொகையாக வைத்து கொண்டால் போதுமானது.

இதையடுத்து பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வரை கிடைக்கிறது. இதில் அவசர தேவை, உயர்கல்வி தேவை ஆகியவற்றிற்காக முன்கூட்டியே கணக்கை முடித்து கொள்ளலாம். இதன் குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ.500 ஆகும். இதனை தொடர்ந்து தொடர் வைப்பு (RD) சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 5.8% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச தொகையாக ரூ.100 செலுத்தலாம். அத்துடன் இத்திட்டத்தின் முதிர்வு காலம் முடிவதற்குள் பணத்தை எடுக்க முடியாது.

வங்கித் துறையில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

இதனை தொடர்ந்து சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 7.6% வட்டி விகிதம் பெறலாம். இதில் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். அடுத்ததாக கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.1000 ஆகும். இதிலும் பெண் குழந்தைகளுக்கென்று சேமிப்பு கணக்கை தொடங்கலாம். இதையடுத்து தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு திட்டத்தில் குறைந்தபட்ச வைப்புத் தொகையாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெறப்படும் வட்டியை தொடர் வைப்பு நிதியாகவும் மாற்றலாம். மேற்க்கண்ட திட்டங்களில் பெண் குழந்தைகள் தங்களின் வயதிற்கேற்ப தங்களின் சேமிப்பு கணக்கை தொடங்க முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!