அசிமிற்கு ரெட் கார்ட் கொடுத்த கமல்? இன்றைய எபிசோடில் வர போகும் ட்விஸ்ட் – பிக்பாஸ் சீசன் 6 அப்டேட்!

0
அசிமிற்கு ரெட் கார்ட் கொடுத்த கமல்? இன்றைய எபிசோடில் வர போகும் ட்விஸ்ட் - பிக்பாஸ் சீசன் 6 அப்டேட்!
அசிமிற்கு ரெட் கார்ட் கொடுத்த கமல்? இன்றைய எபிசோடில் வர போகும் ட்விஸ்ட் - பிக்பாஸ் சீசன் 6 அப்டேட்!
அசிமிற்கு ரெட் கார்ட் கொடுத்த கமல்? இன்றைய எபிசோடில் வர போகும் ட்விஸ்ட் – பிக்பாஸ் சீசன் 6 அப்டேட்!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் நேற்று ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் அசிம் ஆயிஷாவிடம் நடந்து கொண்ட விதம் பலரை முகம்சுளிக்க செய்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் கமல் சார் அசிமிற்கு ரெட் கார்டு கொடுப்பார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் ரெட் கார்டு:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது இரண்டாவது வாரம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது 21 போட்டியாளர்களும் எலிமினேட் ஆக கூடாது என தீவிரமாக விளையாடி வருகின்றனர். மேலும் கடந்த சீசன்களை போல நண்பர்கள் கேங் என பார்க்காமல் அனைவரும் தனித்து விளையாடி வருகின்றனர். அதுவே நிகழ்ச்சியில் சுவாரசியத்தை அதிகரித்து வருகிறது. மேலும் போட்டியாளர்கள் அனைவரும் கேமராவை மறந்து சண்டையிட்டு வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் ரேங்கிங் டாஸ்க் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் போட்டியாளர்கள் தங்களை 12 இடங்களில் வரிசை படுத்திக் கொள்ள வேண்டும். கடைசி 2 இடங்களை பிடித்தவர்கள் சிறைக்கு தள்ளப்படுவார்கள். அதில் அசிம் தனக்கு ஆயிஷாவின் இடம் வேண்டும் எனவும், அவர் வீட்டில் தூங்கி கொண்டே இருப்பதாகவும், எந்த வேலையும் செய்வதில்லை என சொல்கிறார். என்னை எப்படி வேலை செய்யவில்லை என நீங்க சொல்லலாம் என ஆயிஷா கேட்க, இருவருக்கும் இடையே சண்டை வருகிறது.

ஆமா.. இரண்டாம் திருமணம் தான் செய்ய போறேன்.. 56 தான் வயதில் சன் டிவி சீரியல் நடிகர் எடுத்துள்ள முடிவு!

Exams Daily Mobile App Download

சண்டை அதிகமாகி அசிம் ஆயிஷாவை போடி வாடி என பேசுகிறார். உடனே ஆயிஷா அப்படி பேசாதீங்க என சொல்ல, ஆனால் அசிம் கேட்கவில்லை. அதனால் இருவருக்கும் இடையே சண்டை பெரிதாகி ஆயிஷா செருப்பை கழட்டி அடிக்க செல்கிறார். சக போட்டியாளர்கள் இருவரையும் தடுக்க பின் சண்டை முடிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இப்படி ஒரு சண்டை வந்தது இல்லை என்பதால், இன்றைய எபிசோடில் கமல் அசிமிற்கு ரெட் கார்ட் கொடுக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்றைய எபிசோடில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாக தெரிகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!