பிக் பாஸ் 6: செம மாஸாக வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்த போட்டியாளர் – அசந்து போன ரசிகர்கள்!

0
பிக் பாஸ் 6: செம மாஸாக வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்த போட்டியாளர் - அசந்து போன ரசிகர்கள்!
பிக் பாஸ் 6: செம மாஸாக வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்த போட்டியாளர் – அசந்து போன ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 1 வாரம் கடந்துள்ள நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியம் தற்போது கூடியுள்ளது. அதிலும், 8ம் நாளான நேற்று புதிதாக போட்டியாளர் ஒருவரை வைல்டு கார்டு என்ட்ரியாக அனுப்பியுள்ளனர்.

வைல்டு கார்டு என்ட்ரி:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுவும் தற்போது தொடங்கியிருக்கும் சீசன் 6ல் போட்டியாளர்கள் மிகவும் கலவையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அரசியல் பேசும் விக்ரமன், தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர், நடிகைகள், நடிகர்கள், காமெடி கலைஞர், பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் என்று பல துறைகளில் இருந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாக்கியாவின் பாடலை ரசித்த கோபி, சமையல் போட்டி பற்றி ஐடியா கொடுத்த முல்லை – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

Exams Daily Mobile App Download

இது தவிர பொதுமக்களில் இருந்து மக்களின் பிரதி நிதியாக ஷிவின் என்ற திருநங்கை ஒருவரும், ரீல்ஸ் பிரபலம் தனலட்சுமி என்ற பெண்ணும் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்று கிழமை எபிசோட் என்பதால் உலக நாயகன் கமல் போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். நேற்று வித்தியாசமான டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. முதல் வாரத்திலேயே மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களை இந்த சீசன் கொண்டிருந்தது என்று கமல் புகழ்ந்துவிட்டார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆனால் இறுதியாக யாரும் எதிர்பார்க்காத வகையில், 21-வது போட்டியாளராக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தார். ஆட்டம், பாட்டம் என்று கலகலப்பாக வந்த மைனாவை பார்த்து மற்ற போட்டியாளர்கள் அனைவரும் குஷியாகி விட்டனர். மைனாவும் வந்த உடனேயே அனைவரிடமும் மிகவும் ஜாலியாக பேசி பழக ஆரம்பித்து விட்டார். கலகலப்பாக பேசும் மைனாவின் பிக் பாஸ் பயணம் எவ்வாறு இருக்க போகிறது என்று இனி வரும் நாட்களின் மூலம் தெரிந்து விடும். பிக் பாஸ் பயணம் எவ்வாறு இருக்க போகிறது என்று இனி வரும் நாட்களின் மூலம் தெரிந்து விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!