‘பிக் பாஸ்’ வனிதாவிற்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம் – 3 மணிநேரம் என்ன நடந்தது?

0
'பிக் பாஸ்' வனிதாவிற்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம் - 3 மணிநேரம் என்ன நடந்தது?
'பிக் பாஸ்' வனிதாவிற்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம் - 3 மணிநேரம் என்ன நடந்தது?
‘பிக் பாஸ்’ வனிதாவிற்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட சோகம் – 3 மணிநேரம் என்ன நடந்தது?

தற்போது தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரத்திற்கு சுற்றுலா சென்றிருக்கும் வனிதா அங்குள்ள விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேலாக சிக்கித்தவித்ததாக சொல்லி வீடியோ ஒன்றை வலைதளத்தில் பதிவிட அப்பதிவு வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் தற்போது தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் திரைப்பட நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா, ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகையாக அறிமுகமானார். நடிகையாக அறிமுகமான முதல் படத்திலேயே முன்னணி நடிகர் விஜயுடன் ஜோடி போட்ட இவர், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

“வாழ வேண்டிய வயதில் வாடிய மலர் சித்ரா” பாண்டியன் ஸ்டோர்ஸ் கதாபாத்திரங்கள் நினைவஞ்சலி!

தொடர்ந்து திருமணத்துக்கு பின்பாக சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்த இவர் விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் தனது அடாவடி பேச்சால் மக்களின் வெறுப்பை சம்பாதித்த இவர், ஒரு கட்டத்தில் மக்களின் பொழுதுபோக்காக மாறினார். இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிற்பாடு 3வது திருமணம் செய்து கொண்டு சர்ச்சையில் சிக்கிய இவர், தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படி இருக்க தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரத்திற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை வனிதா அங்குள்ள விமான நிலையத்தில் இருந்து வெளியே போக முடியாமல் 3 மணி நேரம் சிக்கி இருக்கிறார். இந்த விஷயத்தால் கடுப்பான நடிகை வனிதா இது குறித்து தனக்கே உரிய பாணியில் ஒரு பதிவை வெளியிட அது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, ஒரு விமான நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்ட வனிதா, ‘மோசடி. விமான நிலையத்தில் சிக்கி 3 மணி நேரம் கடந்தது. பாங்காக் விமான நிலையம் முழுவதும் வெறிச்சோடி கிடக்கிறது.

Vijay TV Bigg Boss 5 Promo | ப்ரியங்கா, தாமரைக்கு இடையில் பூதாகரமாக வெடித்த சண்டை! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

டியூட்டி ஃப்ரீ இல்லை, சாப்பாடு இல்லை, காபி இல்லை. குறிப்பாக பாங்காக் முழுவதும் பிரிண்டர் இல்லை. தகுதியான பயணிகளுக்கு வருகையின் போது விசாவிற்கு பிரிண்ட் எடுக்க பிரிண்டர் இல்லை. பாங்காக்கில் நுழைவதற்கு தைலி பாஸ் எனப்படும் நுழைவுச் சான்றிதழ் தேவை. அதை நான் இந்தியாவிலிருந்து வரும் போது எடுத்து வந்துள்ளேன். இப்போது விமான நிலையத்தில் அச்சுப்பொறி இல்லை என்பதால் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது. அங்குள்ள மேலாளர் என்னை ஒரு புதிய டிக்கெட்டை வாங்கி இந்தியாவிற்கு பிரிண்ட் அவுட் எடுக்கச் செல்லுமாறு கேட்கிறார்’ என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!