Vijay TV Bigg Boss 5 Promo | ப்ரியங்கா, தாமரைக்கு இடையில் பூதாகரமாக வெடித்த சண்டை! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

0
Vijay TV Bigg Boss 5 Promo | ப்ரியங்கா, தாமரைக்கு இடையில் பூதாகரமாக வெடித்த சண்டை! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!
Vijay TV Bigg Boss 5 Promo | ப்ரியங்கா, தாமரைக்கு இடையில் பூதாகரமாக வெடித்த சண்டை! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!
Vijay TV Bigg Boss 5 Promo | ப்ரியங்கா, தாமரைக்கு இடையில் பூதாகரமாக வெடித்த சண்டை! அதிர்ச்சியில் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஆரம்பம் முதலே போட்டியாளர்கள் மத்தியில் அதிக சண்டைகள் நிலவி வந்தது. தற்போது போதா குறைக்கு அரசியல் கட்சிகளை போன்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சண்டை மேலும் அதிகரித்துள்ளது.

அரசியல் கட்சிகள்:

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் மூலை முடுக்கு முதற்கொண்டு அனைத்து பகுதிகளிலும் மிகவும் பிரபலமாக உள்ளது. மொத்தம் 18 போட்டியாளர்கள் தற்போதைய 5வது சீசனில் வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர். இவர்களில் தெருக்கூத்து நாடக துறையை சேர்ந்த தாமரை என்பவர் இந்த நிகழ்ச்சி பற்றி எதுவுமே தெரியாது என்று சொல்லிக் கொண்டே நுழைந்தார். இதனால் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு மிகவும் கரிசனமாக சொல்லிக்கொடுத்து வந்தனர். ஆரம்பத்தில் அனைவரிடமும் மிகவும் வெகுளியாக இருப்பது போல் தாமரையும் பழகி வந்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை சித்ரா குறித்து மனம் உருகிய வெங்கட், குமரன் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஆனால் கடந்த சில வாரங்களாக உலக நாயகன் கமல் அவர்களே தாமரையை பற்றி குறிப்பிட்டு கூறும் அளவிற்கு தாமரையின் செயல்கள் வீட்டிற்க்குள் மாற ஆரம்பித்துள்ளது. தாமரை அடுத்தவரை பற்றி குறைகளை கூறும் போது அதை மற்றவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், தாமரையை பற்றிய கருத்துக்களை மட்டும் அவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார் என்றும் பிக் பாஸ் வீட்டிற்குள் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த வாரம் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் ஆக அரசியல் கட்சிகளை போன்று போட்டியாளர்கள் குழுவாக பிரிந்து அவர்களின் கொள்கைகளை எடுத்து சொல்வது போன்று கொடுக்கப்பட்டுள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் நடிகை சுஜிதாவின் சொந்த ஊர் விசிட் – வைரலாகும் வீடியோ!

இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு குழுவினர் மற்ற குழுவினரை தாக்கி பேசி வந்தனர். நேற்று அனைவரும் போட்டியில் மாறி மாறி சண்டை இடுவதை பார்த்து, தாமரை கூறிய கருத்தினால் அபிநய் மற்றும் தாமரைக்கு இடையில் பலத்த வாக்குவாதம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றைய போட்டியிலும், ப்ரியங்கா ஏதோ கூற முயல அதற்கு தாமரை மிகவும் கோவத்தோடு கத்துகிறார். இதனால் பிரியங்காவும் சேர்ந்து கத்துகிறார். இதனால் பெரிய அளவிலான சண்டை வெடிக்கிறது. இன்றைய நிகழ்ச்சியில் நேற்றை போல் சுவாரசியம் அதிகமாக இருக்கும் என்பது ரசிகர்களுக்கு உறுதியாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!