‘பிக்பாஸ்’ வனிதாவின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!

0
'பிக்பாஸ்' வனிதாவின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!
'பிக்பாஸ்' வனிதாவின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!
‘பிக்பாஸ்’ வனிதாவின் சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா? வெளியான தகவல்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமாரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இது தொடர்பான விவரங்களை இப்பதிவில் காணலாம்.

நடிகை வனிதா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். அதாவது இவர் பேசும், செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் பெரிய பிரளயத்தையே உண்டு பண்ணி அது கடைசியில் சர்ச்சையாக மாறி விடுவது வழக்கம். அந்த வகையில் சொந்த வாழ்க்கை, சினிமா, பிக்பாஸ் நிகழ்ச்சி என அனைத்திலும் அடிபட்டு தற்போது பேசும் பொருளாக மாறி இருக்கும் நடிகை வனிதா தென் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய புள்ளியாக கருதப்படுகிறார்.

திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – 15 நாட்கள் தடை! தேவஸ்தானம் அறிவிப்பு!

சினிமாவின் ஆரம்ப கால கட்டத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் பெயரையும், புகழையும் பெற்றுக்கொண்ட நடிகை வனிதா திருமணத்துக்கு பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இடையில் இவருக்கும், இவரது அப்பா நடிகர் விஜயகுமாருக்கும் இடையே ஏற்பட்ட சில குடும்ப தகராறு காரணமாக மீண்டுமாக திரையில் தோன்ற ஆரம்பித்த வனிதா மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இது எதையும் பொருட்படுத்தி கொள்ளாமல் இருந்த நடிகை வனிதா, நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் போன்ற சில தமிழ் படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். இந்த திரைப்படங்கள் மூலம் ஓரளவு ஃபேம் கிடைக்கவே விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. என்றாலும் இந்த நிகழ்ச்சியில் தனது அடாவடி பேச்சால் மீண்டுமாக சர்ச்சை வலைக்குள் சிக்கினார்.

இம்மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தொடர்ந்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிற்பாடு 3வதாக திருமணம் செய்து கொண்ட வனிதா மக்களின் பொழுது போக்காகவே மாறினார். இந்த திருமணமும் இவருக்கு நிலைக்காத நிலையில் தற்போது தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். தவிர சில முன்னணி தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை வனிதா விஜயகுமாரின் சொத்து மதிப்பு ரூ.60 கோடி என்றதொரு புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!