இம்மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
இம்மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இம்மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இம்மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்திய ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் பட்டியலின் படி டிசம்பர் மாதத்தில் 7 நாட்கள் சிறப்பு மற்றும் பண்டிகை நாட்கள் காரணமாகவும், 5 நாட்கள் வார இறுதி விடுமுறை காரணமாகவும் வங்கிகள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் விடுமுறை:

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை காலண்டர் பட்டியலின் படி டிசம்பர் மாதம் 7 நாட்கள் நாடு முழுவதும் சிறப்பு நாட்கள் மற்றும் பண்டிகையின் காரணமாகவும், 5 நாட்கள் வார இறுதி நாட்கள் காரணமாகவும் மொத்தம் 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் மாதத்தில் உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்வதற்கு முன்னதாக வங்கி விடுமுறை தினங்களின் பட்டியலை சோதித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இருப்பினும், அனைத்து மாநிலங்களிலும் மற்றும் பிராந்தியங்களிலும் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படாது.

நிரூப் & பிரியங்காவை தூண்டி விடும் அபிஷேக் – விறுவிறுப்பாக வெளியான ‘பிக்பாஸ்’ சீசன் 5 ப்ரோமோ!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள் அரசால் கடைப்பிடிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும் மொத்த எண்ணிக்கை தான் 12 ஆகும். வங்கி விடுமுறைகள் பல்வேறு மாநிலங்களில் மாறுபடும் மற்றும் அனைத்து வங்கி நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களை பொறுத்து மாறுபடும். ஆனால், தொடர்ந்து ஆன்லைன் வங்கி சேவைகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பட்டியல்:
 • 3 டிசம்பர் -புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (கனகதாச ஜெயந்தி/புனித பிரான்சிஸ் சேவியரின் விழா) (பனாஜியில் வங்கிகள் மூடப்படும்.)
 • 5 டிசம்பர் – ஞாயிறு
 • 11 டிசம்பர் – சனிக்கிழமை (மாதத்தின் 2வது சனிக்கிழமை)
 • 12 டிசம்பர் – ஞாயிறு
 • 18 டிசம்பர் – யு சோ சோ தாம் கீ இறந்த நாள் (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)
 • 19 டிசம்பர் – ஞாயிறு
 • 24 டிசம்பர் – கிறிஸ்துமஸ் பண்டிகை (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)
 • 25 டிசம்பர் – கிறிஸ்துமஸ் (பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் தவிர அனைத்து இடங்களிலும் வங்கிகள்
  மூடப்படும்) சனிக்கிழமை, (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)
 • 26 டிசம்பர் – ஞாயிறு
 • 27 டிசம்பர் – கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)
 • 30 டிசம்பர் – யு கியாங் நோங்பா (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)
 • 31 டிசம்பர் – புத்தாண்டு கொண்டாட்டம் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!