‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் வனிதாவுடன் மோதிய ஜுலி – கலவரமான வீடு! ப்ரோமோ ரிலீஸ்!

0
'பிக் பாஸ்' அல்டிமேட் ஷோவில் வனிதாவுடன் மோதிய ஜுலி - கலவரமான வீடு! ப்ரோமோ ரிலீஸ்!
'பிக் பாஸ்' அல்டிமேட் ஷோவில் வனிதாவுடன் மோதிய ஜுலி - கலவரமான வீடு! ப்ரோமோ ரிலீஸ்!
‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் வனிதாவுடன் மோதிய ஜுலி – கலவரமான வீடு! ப்ரோமோ ரிலீஸ்!

தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தலத்தில் வெளியாகி கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் கொடுக்கப்பட்டுள்ள திருடன், போலீஸ் டாஸ்க்கில் வனிதா மற்றும் ஜுலிக்கு இடையே வாக்குவாதம் முற்றி பெரிய சண்டை உருவாகி இருக்கும் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட்

‘பிக் பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் வரலாற்றில் இதுவரை இல்லாதவொரு புது முயற்சியாக துவங்கப்பட்ட ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோ தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டார் OTT தலத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் 70 நாட்கள் மட்டுமே நடத்தப்பட இருக்கும் இந்த ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில் முன்னாள் போட்டியாளர்களான 14 பேர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சி துவங்கி ஒரு வாரம் முடிவடைந்திருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து முதன் முதலாக சுரேஷ் சர்க்கரவர்தி வெளியேறி இருக்கிறார்.

திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானாவுடன் நடிகர் ஆர்யன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!

இதனை தொடர்ந்து இந்த வார எவிக்சனில் இருந்து வனிதா காப்பாற்றப்பட்டுள்ளார். இப்போது பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க் துவங்கி இருக்கும் நிலையில், அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு திருடன், போலீஸ் என விளையாடி வருகின்றனர். இதில் நேற்று நடைபெற்ற டாஸ்கில் ஜுலி, வனிதாவின் செண்ட் பாட்டிலை எடுத்து விட்டதாக கூறி பிக் பாஸ் வீட்டில் வனிதா ஒரு பெரிய ரகளை செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது வெளியாகி கொண்டிருக்கும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் ஷோவில், மீண்டும் வனிதா மற்றும் ஜுலிக்கு இடையே வாக்குவாதம் முற்றி இருக்கிறது. அதாவது, வனிதா எதையோ குறிப்பிட்டு எப்படி எடுத்தீர்களோ அதை அப்படியே வையுங்கள், இந்த ட்ராமா பண்ணீங்க என்றால் வீட்டில் இருக்கும் எல்லா பொருட்களையும் உடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார். உடனே நாங்கள் என்ன ட்ராமா பண்றோம் என்று ஜுலி பேச வர அடுத்து பாலாஜி வந்து ஜுலியை சத்தம் போடுகிறார்.

5 மாத கர்ப்பத்தில் ஆளே மாறிப்போன நடிகை காஜல் அகர்வால் – வைரலாகும் பேபி பம்ப் புகைப்படங்கள்!

தொடர்ந்து வனிதா ஜுலியின் கையை இழுக்க முற்படும் போது அவருக்கு காயம் பட, கை கட்டி இருக்கிறது தெரியுதுல்ல. எதுக்கு இழுக்குறீங்க என்று ஜுலி கோபப்படுகிறார். அதாற்கு, எனக்கு தெரியாதுடி. நீ திருடும் போது ஒழுங்கா திருடினியா. மூடிட்டு போ என்று வனிதா கத்துகிறார். பிறகு, என்ன சொன்னாலும் உடனே அழுகாத என்று வனிதா ஜுலியை பார்த்து கிண்டலாக கூற, நான் அழுகவில்லை. நன்றாக பாருங்கள் மேடம் என்று ஜுலி நக்கலாக பதில் சொல்வது போல அந்த ப்ரோமோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here