5 மாத கர்ப்பத்தில் ஆளே மாறிப்போன நடிகை காஜல் அகர்வால் – வைரலாகும் பேபி பம்ப் புகைப்படங்கள்!

0
5 மாத கர்ப்பத்தில் ஆளே மாறிப்போன நடிகை காஜல் அகர்வால் - வைரலாகும் பேபி பம்ப் புகைப்படங்கள்!
5 மாத கர்ப்பத்தில் ஆளே மாறிப்போன நடிகை காஜல் அகர்வால் - வைரலாகும் பேபி பம்ப் புகைப்படங்கள்!
5 மாத கர்ப்பத்தில் ஆளே மாறிப்போன நடிகை காஜல் அகர்வால் – வைரலாகும் பேபி பம்ப் புகைப்படங்கள்!

சமீபத்தில் துபாய் அரசாங்கத்தால் கோல்டன் விசா பெற்றுள்ள நடிகை காஜல் அகர்வால் தற்போது துபாயில் தனது நேரத்தை செலவிட்டு வரும் நிலையில், இவரது பேபி பம்ப் புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வால்

ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பாக ‘பழனி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் மும்பையை சொந்த ஊராக கொண்டவர். நடிப்பின் மீதுள்ள ஆசையால் 2004ம் ஆண்டு ஒரு ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய காஜல் அகர்வாலுக்கு மிகுந்த வரவேற்புகளை கொடுத்தது தெலுங்கு திரைப்பட உலகம். அந்த வகையில் தெலுங்கு திரைப்படங்களை தொடர்ந்து, தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால் குறுகிய காலங்களில் நடிகர் சூர்யா, விஜய், கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

விவாகரத்து பத்திரத்துடன் பாக்கியாவிற்கு குங்குமம் வைக்கும் கோபி, குடும்பத்திற்காக முடிவில் மாற்றம் வருமா? இன்றைய எபிசோட்!

தற்போது கூட நடிகர் துல்கர் சல்மானுடன் இவர் ஜோடியாக நடித்திருக்கும் ‘ஹே சினாமிகா’ என்ற திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இப்படி தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தை பெற்றிருக்கும் நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலு என்ற தொழிலதிபரை மனம் முடித்தார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்துகொண்டிருந்த காஜல் திடீரென கர்ப்பமானதையடுத்து ‘இந்தியன் 2’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் இருந்து விலகினார்.

கண்ணனை அடித்தவனை தேடும் கதிர், கோபத்துடன் அலுவகத்தில் காத்திருக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இப்போது தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து வரும் நடிகை காஜல் அகர்வால் தனது கர்ப்பகாலத்தை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் துபாய் அரசாங்கத்திடம் இருந்து கோல்டன் விசாவை பெற்றிருக்கும் காஜல், தற்போது துபாயில் தனது பொழுதை உற்சாகமாக கழித்து வருகிறார். தற்போது 5 மாத கர்ப்பமாக இருக்கும் நடிகை காஜல் சற்றே குண்டான தோற்றத்தில் இருக்கும் தனது பேபி பம்ப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட அது வழக்கம் போல வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!