திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானாவுடன் நடிகர் ஆர்யன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
திருமணத்திற்கு பின் 'செம்பருத்தி' ஷபானாவுடன் நடிகர் ஆர்யன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உற்சாகம்!
திருமணத்திற்கு பின் 'செம்பருத்தி' ஷபானாவுடன் நடிகர் ஆர்யன் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உற்சாகம்!
திருமணத்திற்கு பின் ‘செம்பருத்தி’ ஷபானாவுடன் நடிகர் ஆர்யன் வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானாவை காதல் திருமணம் செய்துகொண்ட நடிகர் ஆர்யன், இருவரும் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்ய அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் ஆர்யன்

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான ‘பாக்கியலட்சுமி’ இல் செழியன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் ஆர்யன் சமீபத்தில் ஜீ தமிழின் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இந்த காதல் விஷயம் ரசிகர்களுக்கு தெரிய வந்த போது இது எப்படி நடந்தது. இரு வெவ்வேறு சேனல்களை சேர்ந்த இவர்கள் இருவரும் எப்போது சந்தித்தார்கள். எப்படி காதலில் விழுந்தார்கள் என்று ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

5 மாத கர்ப்பத்தில் ஆளே மாறிப்போன நடிகை காஜல் அகர்வால் – வைரலாகும் பேபி பம்ப் புகைப்படங்கள்!

இந்த சூழலில் எதிர்பாராத வண்ணமாக கடந்த நவம்பர் மாதத்தில் ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தனர். தொடர்ந்து திருமணத்திற்கு பின்பாக தங்களது வேளைகளில் கவனம் செலுத்தி வரும் இவர்கள் இருவரும் அவ்வப்போது ஜோடியாக இருக்கும் சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் அத்தனையும் வைரலாவது உண்டு.

அப்பாவிற்கு முடியவில்லை, கதை கதையாக சொன்ன அர்ச்சனா – “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இதில் குறிப்பாக திருமணத்திற்கு முன்பு எந்தவொரு வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இல்லாத ஆர்யன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவது, ஸ்டோரி ஷேர் செய்வது, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது என்று ஆர்வமாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் ஆர்யன், ஷபானாவுடன் எடுத்துக்கொண்ட ஒரு ரொமான்டிக் புகைப்படத்தை ‘தும் ஹி ஹோ’ என்ற ஹிந்தி பாடலுடன் எடிட் செய்து தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் பதிவிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!