வனிதாவை சரமாரியாக கேள்வி கேட்ட கமல், முடிவுக்கு வந்த காபி பிரச்சனை – பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோ ரிலீஸ்!

0
வனிதாவை சரமாரியாக கேள்வி கேட்ட கமல், முடிவுக்கு வந்த காபி பிரச்சனை - பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோ ரிலீஸ்!
வனிதாவை சரமாரியாக கேள்வி கேட்ட கமல், முடிவுக்கு வந்த காபி பிரச்சனை - பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோ ரிலீஸ்!
வனிதாவை சரமாரியாக கேள்வி கேட்ட கமல், முடிவுக்கு வந்த காபி பிரச்சனை – பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோ ரிலீஸ்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது முதல் வாரம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் கமல் வந்து இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகள் பெற்று வெளியேறும் போட்டியாளர் குறித்து தெரிவிக்க இருக்கிறார்.

பிக்பாஸ் எலிமினேஷன்:

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில், அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு மறுவாய்ப்பு கொடுப்பது போல பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் 14 போட்டியாளர்கள் களமிறங்கி இன்றுடன் ஒரு வாரம் முடிவடைந்துள்ளது. இந்த ஒரு வாரத்தில் பல சண்டை சச்சரவுகள் காபி பொடிக்கு தர்ணா போராட்டம் என பல விஷயங்கள் நடந்தது. வனிதா வந்ததுமே சர்ச்சை இருக்கும் என போட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில், அது இந்த அளவிற்கு நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.

தாலி கட்டும் நேரத்தில் நின்று விடும் தமிழ் & சரஸ்வதி திருமணம், கோதை தான் காரணமா? அடுத்த வார எபிசோட்!

மேலும் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி நேரலையில் காட்டப்பட்டுள்ளது. வார இறுதி நாளான இன்று கமல் வர இருக்கிறார். அவர் வனிதா காபி வேண்டும் என சண்டை போட்டது குறித்து கேள்வி கேட்கிறார். அதில் வனிதா டீத்தூள்ளை ஒளித்து வைத்ததும் போட்டியாளர்கள் அதை பிக்பாஸ் குழு எடுத்துக் கொண்டதாக நினைத்தார்கள். அதனால் வனிதா மீது பயந்து அப்படி நினைத்தீர்களா என கமல் கேட்க, உடனே சினேகன் வனிதா அக்கா மீது எல்லாருக்கும் பயம் தான் என விளக்கம் அளித்து இருக்கிறார்.

விவாகரத்து பத்திரத்துடன் வந்த கோபி, குங்குமம் வைக்க சொன்ன பாக்கியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பின் வனிதா செய்தது தவறு என சொல்ல, இல்லை சார் என வனிதா கேட்கிறார். இல்லை என்றால் WARM UP செய்தீர்களா என கேட்ட கமல் காபியை வைத்துக் கொண்டு WARM UP செய்தால் அது கொட்டிவிடும் என விளக்கம் அளித்து இருக்கிறார். உடனே வனிதா எதுவும் பேச முடியாமல் இருக்கிறார். கமல் இந்த நிகழ்ச்சியில் கடுமையாக தான் இருப்பதால் போட்டியாளர்கள் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here