வைரல் பாடலுக்கு ‘பிக் பாஸ்’ தாமரை & ஐக்கி பெரியின் நடனம் – ரசிகர்கள் வரவேற்பு!

0
வைரல் பாடலுக்கு 'பிக் பாஸ்' தாமரை & ஐக்கி பெரியின் நடனம் - ரசிகர்கள் வரவேற்பு!
வைரல் பாடலுக்கு 'பிக் பாஸ்' தாமரை & ஐக்கி பெரியின் நடனம் - ரசிகர்கள் வரவேற்பு!
வைரல் பாடலுக்கு ‘பிக் பாஸ்’ தாமரை & ஐக்கி பெரியின் நடனம் – ரசிகர்கள் வரவேற்பு!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரை செல்வி மற்றும் ஐக்கி பெரி இருவரும் சேர்ந்து தற்போது மிகவும் வைரலாக உள்ள பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதற்கு ரசிகர்கள் அதிக வரவேற்பை அளித்துள்ளனர்.

வைரல் பாடல்:

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 பேரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள். இவர்களில் மிகவும் அடித்தட்டு நிலையில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆகி, அதிக பிரபலத்தையும் பெற்றவர்களில் ஒருவர் தாமரை செல்வி. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது திருமணம் ஆகி திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். தாமரை தெருக்கூத்துகளில் நாடகம் போடும் வேலையை செய்து வந்துள்ளார். தான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்துள்ளதால் பல விஷயங்கள் தனக்கு தெரியாது என்று கூறிவந்தார்.

விவாகரத்தான தனுஷ் & ஐஸ்வர்யாவை சேர்த்து வையுங்கள் – வைரலாகும் லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்!

தாமரை நிகழ்ச்சியில் ஆரம்ப கட்டங்களிலேயே வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவரும் தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி எதுவும் தெரியாது என்றே கூறி வந்தார். ஆனால் அப்படி சொல்லி சொல்லியே நிகழ்ச்சியில் இறுதி வாரம் வரை வந்துவிட்டார். கடைசி எவிக்சனாக தாமரை தான் இருந்தார். நிகழ்ச்சியில் தாமரை இவ்வளவு தூரம் வருவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தாமரையின் எதேச்சையான குணம் தான் அவரை இது வரை கொண்டு வந்தது என்று பலரும் கூறிவந்தனர்.

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்ட நிலையில் அதில் கலந்து கொண்டவர்கள் பலரும் வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தாமரை மற்றும் ஐக்கி பெரி இருவரும் சேர்ந்து தற்போது மிகவும் வைரலாக உள்ள ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இதில் தாமரை அலங்கரிக்கப்பட்டு, மணப்பெண்ணை போல் உடையணிந்து உள்ளார். இவர்களின் நடனத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!