விவாகரத்தான தனுஷ் & ஐஸ்வர்யாவை சேர்த்து வையுங்கள் – வைரலாகும் லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்!

0
விவாகரத்தான தனுஷ் & ஐஸ்வர்யாவை சேர்த்து வையுங்கள் - வைரலாகும் லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்!
விவாகரத்தான தனுஷ் & ஐஸ்வர்யாவை சேர்த்து வையுங்கள் - வைரலாகும் லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்!
விவாகரத்தான தனுஷ் & ஐஸ்வர்யாவை சேர்த்து வையுங்கள் – வைரலாகும் லட்சுமி ராமகிருஷ்ணன் பதில்!

தற்போது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யாவை இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என எழுப்பப்பட்ட கோரிக்கைக்கு நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்துள்ள பதில் வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் விவாகரத்து

தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. சுமார் 18 ஆண்டு கால வாழ்க்கையை முடித்து கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியின் இந்த முடிவு பல லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு வருத்தம் அளிக்கக்கூடியதாக இருந்து வருகிறது. ரசிகர்கள் மத்தியில் ஒரு ஐடியல் தம்பதிகளாக இருந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஜோடியின் இந்த திடீர் பிரிவுக்கு என்ன காரணம் என்று சமூக வலைதளங்களில் கேள்விகள் .

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

இருந்தாலும், விவாகரத்து குறித்த அறிக்கையை வெளியிட்ட இவர்கள் இருவரும் தங்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதனால் சிலர் இந்த விவாகரத்து குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. என்றாலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த திடீர் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாத சில ரசிகர்கள், எதற்காக இந்த விவாகரத்து ஏற்பட்டது என தோண்டி, துருவ ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் நடிகர் தனுஷின் ட்வீட்டை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்துள்ள ரசிகர் ஒருவர், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியை சேர்த்து வையுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், ‘இருவரும் பரஸ்பரம் பேசி முடிவு செய்து விட்டு கண்ணியமாக பிரிகிறார்கள். நாம் விவாகரத்து விஷயங்களில் வழக்கமாக பார்ப்பதை போல இல்லாமல், ஒருவருக்கொருவர் பிரச்சினை செய்யாமல், திட்டிக் கொள்ளாமல் முறைப்படி விவாகரத்து பெறுகிறார்கள். அவர்களை தனியாக விட்டுவிடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

ஹேமா, லட்சுமியுடன் காரில் சுற்றுலா சென்ற கண்ணம்மா – பாரதி இல்லையா? ரசிகர்கள் கமெண்ட்!

ஆனால் இந்த கருத்துக்கு பதிலளித்த அந்த நபர், ‘அவர்களது முடிவு மதிக்கத்தக்கது. இது அவர்களது சொந்த விஷயம் என்பதால் அதை விளம்பரப்படுத்தாமல் அமைதியாக செய்திருக்கலாம். கண்டிப்பாக இது ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்போதெல்லாம் பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், பிரபலங்கள் இது போன்ற தகவல்களை அறிவிக்காவிட்டால் அவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இவர்களை பற்றிய பல தவறான செய்திகள் வைரலாக்கப்படும். நடிகை சமந்தா தனது விவாகரத்து குறித்து அறிவிக்கும் போதும் இது போன்ற அவதூறுகளை சந்தித்தார் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!