விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விவரம் – இறுதி பட்டியல்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5, வருகிற அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் உறுதியான போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 5:
விஜய் தொலைக்காட்சியில் பல பிரபலமான பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் மக்கள் மனம் கவர்ந்த ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது. மேலும் இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான 4 ப்ரோமோக்கள் கமல் நடித்து வெளியாகி உள்ளது. இந்த சீசன் வருகிற அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்க உள்ளதாக ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை அறிந்து கொண்ட பாரதி? வெளியான போட்டோ!
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து தினமும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதில் திருநங்கை நமீதா மாரிமுத்து மற்றும் நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகள் மிளா ஆகியோர் உறுதியாக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல் சூசன், ஜிபி முத்து, கோபிநாத் ரவி, சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி, நடிகை ஷாலு ஷம்மு ஆகியோர் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இமான் அண்ணாச்சியும் இந்த சீசனில் களமிறங்க இருப்பதாக தெரிகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஜீவாவின் சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த வரிசையில் பாடகி சின்ன பொண்ணு இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலில், விஜய் அருகே நடனம் ஆடும் சிபி கலந்து கொள்ள இருப்பதாகவும், நடிகை யாஷிகாவின் நண்பர் நிரூப் கலந்து கொள்ள இருப்பதாக உறுதியான தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.