விஜய் டிவி பிக் ‘பாஸ் சீசன் 5’ ப்ரோமோ ரிலீஸ் – வெகுளியாக பதில் கூறும் தாமரைச் செல்வி!

0
விஜய் டிவி பிக் 'பாஸ் சீசன் 5' ப்ரோமோ ரிலீஸ் - வெகுளியாக பதில் கூறும் தாமரைச் செல்வி!
விஜய் டிவி பிக் 'பாஸ் சீசன் 5' ப்ரோமோ ரிலீஸ் - வெகுளியாக பதில் கூறும் தாமரைச் செல்வி!
விஜய் டிவி பிக் ‘பாஸ் சீசன் 5’ ப்ரோமோ ரிலீஸ் – வெகுளியாக பதில் கூறும் தாமரைச் செல்வி!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் தற்போது பல புதிய முகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை இந்த முறையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் அனைத்து போட்டியாளர்களும் மக்களுக்கு பரிச்சயமாகி இருக்கின்றனர். இந்த வாரம் அனைவரும் தங்களது வாழ்க்கை கதையாக எடுத்துக் கூறி வருகின்றனர்.

‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவை கலாய்க்கும் ரசிகர்கள் – எல்லார்கிட்டயும் அறை வாங்குறீங்களே!

அதில் பலரது வாழ்க்கை மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்து வந்தது. இதன் காரணமாக பலருக்கும் பல ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். தற்போது லேட்டஸ்டாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் கமல் அனைவருக்கும் ஒரு டாஸ்க் கொடுத்திருக்கிறார். அப்போது தாமரைச்செல்வி தனக்கு இந்த நிகழ்ச்சி பற்றி தெரியாது என்றும் பலர் சொல்லிக் கொடுத்துதான் தனக்கு தெரியும் என்றும் கூறுகிறார்.

புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!

பின்னர் தான் மனமுடைந்து அமர்ந்திருக்கும் போது இமான் அண்ணாச்சியிடம் தான் தனது கவலைகளை கூறியிருப்பதால் அவருக்கு ஒரு லைக் பட்டன் கொடுக்கிறேன் என்று கூறுகிறார். பின்னர் சிரித்துக்கொண்டே டிஸ்லைக் பட்டனை யாருக்கும் கொடுக்க விருப்பமில்லை என்று கூறிவிடுகிறார். வீட்டினர் அனைவரும் அவரது வெகுளித்தனமான பேச்சினை கேட்டு சிரிக்கின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது. ரசிகர்கள் பலரும் தாமரைச் செல்வியின் யதார்த்தமான பேச்சினை ரசித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!