சமந்தாவிற்கு போட்டியாக களமிறங்கிய ‘பிக் பாஸ்’ வனிதா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

0
சமந்தாவிற்கு போட்டியாக களமிறங்கிய 'பிக் பாஸ்' வனிதா - உற்சாகத்தில் ரசிகர்கள்!
சமந்தாவிற்கு போட்டியாக களமிறங்கிய 'பிக் பாஸ்' வனிதா - உற்சாகத்தில் ரசிகர்கள்!
சமந்தாவிற்கு போட்டியாக களமிறங்கிய ‘பிக் பாஸ்’ வனிதா – உற்சாகத்தில் ரசிகர்கள்!

பிக்பாஸ் புகழ் நடிகை வனிதா விஜயகுமார், தற்போது பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதவாது திரைப்படத்தில் பாடல் ஒன்றிற்கு ஆட உள்ளதாக தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் வனிதாவின் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஐட்டம் பாடல்:

தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இரண்டு திரை பிரபலங்களான நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியின் மூத்த மகளான வனிதா விஜயகுமார், முதன் முதலில் நடிகர் விஜயுடன் சந்திரலேகா படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின் வனிதா ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பின்னர், திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி விட்டார். ஆனால் பல ஆண்டுகள் கழித்து விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் திரை வாழ்க்கையில் நுழைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் வனிதா எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் புகழையும், ரசிகர்களையும் பெற்றார்.

Vijay TV Bigg Boss 5 Promo | பிரியங்கா, ராஜு தான் வீட்டின் ஒற்றுமைக்கு காரணம்! நிரூப்பின் தந்தை ஓபன் டாக்!

அதன் பின்னர், குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போதே தனியாக யூடுயூப் சேனலையும் தொடங்கி நடத்தி வந்தார். இவரின் சமையல் மிகவும் தனித்துவமாக இருந்து வந்த காரணத்தால் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர், வனிதாவுக்கு அனைத்துமே வெற்றி தான். சின்னத்திரை மற்றும் சினிமா இரண்டிலும் பல வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. தற்போது நடிகர் பிரசாந்தின் அந்தகன், பவர்ஸ்டார் சீனிவாசன் உடன் ஒரு படம், நடமாடும் தங்க நகைக்கடை ஹரி நாடார் உடன் ஒரு படம் என்று மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

விஜய் டிவி சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு கணவர் கொடுத்த சர்பிரைஸ் – வைரலாகும் புகைப்படங்கள்!

இந்நிலையில், வனிதா காத்து என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆட உள்ளதாக தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தான் திரைப்பட உச்ச நடிகை சமந்தா புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி அது பெரும் ஹிட் ஆகியுள்ளது. இதேபோல், வனிதாவும் களமிறங்க உள்ளார் என்பதை அறிந்த ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்து விட்டனர். மேலும், அந்த பாடலில் தனது லுக்கை போட்டோ மூலம் பதிவிட்டுள்ளார். இதனால் சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் வனிதா அக்கா என்று பல ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர். இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!