விஜய் டிவி சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு கணவர் கொடுத்த சர்பிரைஸ் – வைரலாகும் புகைப்படங்கள்!

0
விஜய் டிவி சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு கணவர் கொடுத்த சர்பிரைஸ் - வைரலாகும் புகைப்படங்கள்!
விஜய் டிவி சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு கணவர் கொடுத்த சர்பிரைஸ் - வைரலாகும் புகைப்படங்கள்!
விஜய் டிவி சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு கணவர் கொடுத்த சர்பிரைஸ் – வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் நடிகை நக்ஷத்ராவுக்கு சமீபத்தில் காதல் திருமணம் நடைபெற்றது. தற்போது புகுந்த வீட்டுக்கு சென்றுள்ள நடிகைக்கு அவர் கணவர் கொடுத்த சர்பிரைஸ் புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை நக்ஷத்ரா

தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகையும், விஜேவுமான நடிகை நக்ஷத்ரா தற்போது விஜய் டிவியின் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து வருகிறார். இத்தொடரில் படிப்பு ஏறாத மக்கு பெண்ணாக சரஸ்வதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் அன்பை சம்பாதித்திருக்கும் நடிகை நக்ஷத்ரா, சமீபத்தில் தனது நீண்டநாள் காதலரான ராகவ் என்பவரை மணமுடித்தார். பல ஆண்டுகளாக காதல் ஜோடியாக வலம் வந்த இவர்கள் இருவரும் கடந்த மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

குடி போதையில் சந்தியா மீதுள்ள பாசத்தை காட்டிய சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை நக்ஷத்ராவின் இந்த திருமணத்தில் பல்வேறு சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். தவிர நக்ஷத்ராவின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த திருமணமத்திற்கு பின்னர் கடந்த சில நாளுக்கு முன்பாக நடைபெற்ற சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் வீட்டு விஷேசத்திலும் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டிருந்தனர்.

மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி & கண்ணம்மா – வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் உற்சாகம்!

இதற்கிடையில் திருமணம் முடித்து தற்போது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ள நடிகை நக்ஷத்ராவுக்கு அவரது கணவர் ராகவ் ஒரு சர்பிரைஸ் கொடுத்து மிகவும் உற்சாகமாக அவரை வரவேற்றுள்ளார். அதாவது புகுந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் நடிகை நக்ஷத்ராவின் கால் தரையில் படாமல் கணவர் ராகவ் அவரை தூக்கிக்கொண்டு சென்றிருக்கிறார். இந்த புகைப்படங்கள் அனைத்தும் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!