பாரதி கண்ணம்மா சீரியல் முடிந்தது – கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு விஜய் டிவி கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்!
விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அது குறித்த தகவல்களை இந்த பதிவில் காண்போம்.
பாரதி கண்ணம்மா:
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேல் விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் இந்த தொடர் சற்று குறைவான TRP-யை பெற்றாலும் சென்ற ஆண்டில் இந்த தொடர் உச்சகட்ட வரவேற்பை அடைந்தது. ரசிகர்கள் பலரும் பாரதி எப்பொழுது DNA டெஸ்ட் எடுப்பார் என்று தான் காத்துகொண்டு இருந்தனர்.
ஆனால் அது தற்போது வரை நடக்கவில்லை. இதனால் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் குறைந்தது. தற்போது இந்த தொடர் முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்க்காத விதமாக இதன் இரண்டாம் பாகம் அடுத்து தொடக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Exams Daily Mobile App Download
லட்சுமி, ஹேமா வளர்ந்த பின் அவர்களின் வாழ்க்கை கதை தான் பாரதி கண்ணம்மா 2 என்று கூறப்படுகிறது. மேலும் கண்ணம்மா ரோலில் தற்போது நடித்து வரும் வினுஷா தேவி, ஹேமாவாக பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அந்த சீரியலாவது தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறுமா என பொறுத்து இருந்து பார்ப்போம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்