கண்ணம்மாவை விட்டு விலகுவதற்காக வெண்பாவை திருமணம் செய்துகொள்ளும் பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!

0
கண்ணம்மாவை விட்டு விலகுவதற்காக வெண்பாவை திருமணம் செய்துகொள்ளும் பாரதி - ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவை விட்டு விலகுவதற்காக வெண்பாவை திருமணம் செய்துகொள்ளும் பாரதி - ப்ரோமோ ரிலீஸ்!
கண்ணம்மாவை விட்டு விலகுவதற்காக வெண்பாவை திருமணம் செய்துகொள்ளும் பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!

தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை பார்த்து வருவதால் எப்படியும் சேர்ந்துவிடுவார்கள் என எதிர்பார்த்த சமயத்தில் பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொள்ளும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கண்ணம்மாவை அனைவரும் வெறுத்து ஒதுக்கிய காலகட்டத்தில் பாரதி தான் கண்ணம்மாவை விரும்பி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் குடும்பத்திலுள்ள யாருமே கண்ணம்மாவை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போதும் கண்ணம்மாவிற்கு துணையாக பாரதி மட்டுமே இருந்தார். பின்பு கண்ணம்மா கர்ப்பமானதும் பாரதிக்கு கண்ணம்மா மீது சந்தேகம் என்ற நோய் தொற்றிக் கொண்டது.

Exams Daily Mobile App Download

இந்த சந்தேகத்தை மேலும் மேலும் வெண்பா அதிகப்படுத்திக் கொண்டே இருந்தார். எப்படியாவது பாரதியை திருமணம் செய்தே தீர வேண்டும் என்று நினைத்து கண்ணம்மாவையும் பாரதியையும் பிரிக்க திட்டம் போட்டு கொண்டிருக்கிறார். இதனால் வேறு ஒருவரின் குழந்தை கண்ணம்மாவின் வயிற்றில் வளர்கிறது என பாரதியிடம் கூறி கண்ணம்மா மீதுள்ள சந்தேகத்தை மேலும் மேலும் அதிகப்படுத்தினார். பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருப்பினும் கண்ணம்மா மீதுள்ள சந்தேகம் குறையாமல் பாரதியின் மனதை வெண்பா அவ்வப்போது மாற்றிக் கொண்டிருக்கிறார்.

கண்ணம்மாவை பழி வாங்க நினைக்கும் கணேஷ், திருடி என புகார் – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

தற்போது வெண்பாவின் அம்மாவாக ஷர்மிளா சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார். வெண்பாவின் அம்மா வெண்பாவிற்கு உதவியாக இருப்பார் என எதிர்பாராத சமயத்தில் வெண்பாவிற்கு வேறொரு திருமணம் செய்து வைக்க ஷர்மிளா தயாராகிக் கொண்டிருக்கிறார். தற்போது வரை பாரதி, கண்ணம்மாவை விட்டு விலகவே நினைத்துக் கொண்டிருக்கிறார். கண்ணம்மாவும் பாரதி வேலை பார்த்து கொண்டிருக்கும் மருத்துவமனையில் தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். எப்படியும் கண்ணம்மா மனதை மாற்றிடுவார் என நினைத்து பாரதி, கண்ணம்மாவை கிட்ட நெருங்க விடுவதில்லை. இந்நிலையில் கண்ணம்மாவை வெறுப்பதற்காக வெண்பாவை பாரதி திருமணம் செய்து கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!