“அபி டெய்லர்” சீரியலில் களமிறங்கும் “பாரதி கண்ணம்மா” வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

0
"அபி டெய்லர்" சீரியலில் களமிறங்கும் "பாரதி கண்ணம்மா" வெண்பா - ரசிகர்கள் உற்சாகம்!
“அபி டெய்லர்” சீரியலில் களமிறங்கும் “பாரதி கண்ணம்மா” வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் இளம் வில்லியாக மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை பரீனா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புதிய சீரியலில் களமிறங்கி இருக்கிறார்.

நடிகை பரீனா:

தமிழ் சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடிக்க தொடங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பரீனா. அவர் சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் கர்ப்பமாக இருந்த அவர் பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் வந்தது.

கண்ணம்மாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் உற்சாகம்!

அதனை தொடர்ந்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பின் ஒரு மாதம் இடைவெளி எடுத்த அவருக்கு ஏற்றார் போல கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன் பின் மீண்டும் அவர் சீரியலில் மாஸாக ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதனால் தொடர்ந்து டாப் வரிசையில் அந்த சீரியல் இருக்கிறது. மேலும் பரீனா விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசு? போஸ்டர் யுத்தம்! அரசின் முடிவு என்ன?

அவர் ஏற்கனவே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் தறி என்ற சீரியலில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் பூவே பூச்சூடவா சீரியல் மூலமாக அறிமுகமான ரேஷ்மா மதன் ஜோடியாக நடிக்கும் அபி டெய்லர் சீரியலில் புதிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!