கண்ணம்மாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் உற்சாகம்!

0
கண்ணம்மாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் உற்சாகம்!
கண்ணம்மாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் பாரதி - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் உற்சாகம்!
கண்ணம்மாவை மனைவியாக ஏற்றுக் கொள்ளும் பாரதி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய திருப்பமாக பாரதி, கண்ணம்மாவை தன் வீட்டுக்கு அழைத்து வந்து அவரை மனைவியாக ஏற்றுக்கொள்வது போல வெளியாகி இருக்கும் ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

பாரதி கண்ணம்மா

கடந்த சில வாரங்களாக மக்களின் விருப்பதிக்கேற்ற கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சில எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட இருக்கிறது. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பப்படும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 700 எபிசோடுகளை தொடவிருக்கும் நிலையில், சில முக்கியமான சம்பவங்கள் அரங்கேற இருக்கிறது. இத்தொடரில் கட்டாயத்தின் காரணமாக சேர்ந்து வாழ்ந்து வந்த பாரதி, கண்ணம்மா இருவரும் தங்களது கோபத்தை எல்லாம் மறந்து விட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள துவங்கியுள்ளனர்.

குறிப்பாக, கண்ணம்மாவை ஏற்க மறுத்து அடம் பிடித்து வைத்த பாரதிக்கு கூட ஒரு பெரிய மனமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த கதை இப்படியே நகர்ந்து வர எப்போது இவர்கள் இருவரும் ஒன்று சேருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ஒரு முக்கிய ட்விஸ்டு நடைபெற இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. அதாவது, கண்ணம்மாவின் கையை பிடித்து சௌந்தர்யா வீட்டுக்கு அழைத்து வரும் பாரதியை கண்டு குடும்பத்தார் அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.

தொடர்ந்து பாரதியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க செல்லும் கண்ணம்மாவை தடுக்கும் பாரதி, நீ என்னை ஒரு கணவனாக மதித்து காலில் ஆசீர்வாதம் வாங்க வருகிறாய். அதே போல நானும் உன்னை ஒரு மனைவியாக மதித்து ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்னாடி நான் உன்னிடம் ஒரு சில விஷயங்களை பற்றி பேச வேண்டும். நீ இந்த உலகத்தில் ஆசைப்பட்ட எல்லாவற்றையும் உனக்கு தருகிறேன்.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசு? போஸ்டர் யுத்தம்! அரசின் முடிவு என்ன?

எனக்கு மனைவியாக, என் அம்மாவுக்கு மருமகளாக, என் குழந்தைக்கு அம்மாவாக இருக்க வேண்டும் என்கிற ஆசையை எல்லாம் நான் உனக்கு நிறைவேற்றி தருகிறேன் என்று கூற மற்ற அனைவரும் உற்சாகமாகின்றனர். ஆனால், ஒரு கண்டிஷன் என பாரதி தொடர சில திக் திக் நிமிடங்களுடன் அந்த ப்ரோமோ முடிவடைகிறது. தொடர்ந்து இன்னும் 5 நாட்களில் என்ற குறிப்பும் அந்த ப்ரோமோவில் இடம்பெற அது என்ன 5 நாள், அதில் என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் இப்போதிலிருந்தே யோசிக்க துவங்கியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!