விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – வெண்பாவை மிரட்டும் கண்ணம்மா!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிய ட்விஸ்ட் - வெண்பாவை மிரட்டும் கண்ணம்மா!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலில் புதிய ட்விஸ்ட் - வெண்பாவை மிரட்டும் கண்ணம்மா!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – வெண்பாவை மிரட்டும் கண்ணம்மா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த எபிசோடுகளில் அந்நியன் பட பாணியில் கண்ணம்மா, வெண்பாவை மிரட்டுவது போல வெளியாகி இருக்கும் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் ப்ரோமோவுக்கு பெயர் போன ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் கண்ணம்மாவுக்கு எதிராக எப்போதும் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கும் வெண்பா அவ்வப்போது கண்ணம்மா மற்றும் சௌந்தர்யாவிடம் அடி வாங்கி அசிங்கப்படுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

மத்திய அரசு ஆதார் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

அந்த வகையில் தற்போதும் கண்ணம்மாவின் 2வது குழந்தையை காரணம் காட்டி வெண்பா மிரட்டி வருகிறார். இதை முழுதாக நம்பும் கண்ணம்மா, வெண்பா சொல்லுவதற்கு எல்லாம் தலை ஆட்டுகிறார். இதற்கிடையில் வெண்பாவின் மிரட்டலுக்கு அடிபணியும் கண்ணம்மா, விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்திட துணிந்து விடுகிறார். அப்போது தான் எதிர்பாராத விதமாக சௌந்தர்யா, ஹேமா பற்றிய உண்மையை கண்ணம்மாவிடம் சொல்லி விடுகிறார்.

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

இதை தொடர்ந்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் அடுத்த கட்ட கதைக்களத்துக்கான புதிய ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அதில் கண்ணம்மா, அந்நியன் பட பாணியில் வெண்பாவை மிரட்டுவது போல சில காட்சிகள் இடம்பிடித்திருந்தது.

தமிழகத்தில் 9, 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அக்.21, 22 இல் ஆலோசனை!

அதாவது கண்ணம்மாவுக்கு 2வது குழந்தை பற்றிய உண்மை தெரிந்ததை அறியாத வெண்பா, வழக்கம் போல கண்ணம்மாவை மிரட்டுகிறார். ஆனால் வெண்பாவை வைத்து செய்ய நினைக்கும் கண்ணம்மா அவரை மிரட்டுவது போலவும், கெஞ்சுவது போலவும் வித்தியாசமான நடிப்பில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். இந்த ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் புதிய எபிசோடுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!