பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பாரதி – இவருக்கு பதில் இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பாரதி - இவருக்கு பதில் இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பாரதி - இவருக்கு பதில் இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பாரதி – இவருக்கு பதில் இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!

பாரதியும் கண்ணம்மாவும் தற்போது ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். எப்படியும் இருவரும் சேர வாய்ப்பிருக்கிறது என எதிர்பார்த்த சமயத்தில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. கண்ணம்மா அம்மா இல்லாமல் அம்மா பாசத்திற்காக தவித்த கால கட்டத்தில் கண்ணம்மாவின் நிறத்தை வைத்து பலரும் வெறுத்து ஒதுக்கினர். அப்போது கண்ணம்மாவின் நல்ல குணத்தை பார்த்து பாரதி தான் விரும்பி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்.

TN Job “FB  Group” Join Now

கண்ணம்மாவை பாரதி திருமணம் செய்த போது அனைவருமே வெறுத்தனர். சௌந்தர்யா கூட கண்ணம்மாவை வேலைக்காரி மாதிரி தான் நடத்தி வந்தார். அப்போதெல்லாம் கண்ணம்மாவிற்கு துணையாக பாரதி தான் இருந்து வந்தார். பின்பு, நாளடைவில் கண்ணம்மாவின் நல்ல குணத்தை அனைவருமே புரிந்துகொண்டனர். வீட்டிலுள்ள அனைவரும் கண்ணம்மாவை ஏற்றுக் கொண்ட போது பாரதிக்கு சந்தேகம் என்ற ஒரு நோய் வந்து தொற்றிக் கொண்டது. இந்த சந்தேக நோயால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கண்ணம்மாவை விட்டு பிரிந்து இருக்கிறார். கண்ணம்மா மீது தவறுஇருக்காதோ, நாம் தான் அப்படி நினைத்து கொண்டிருக்கோமோ என நினைக்கும் போதெல்லாம் வெண்பா வந்து மனதை மாற்றி விடுகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – ஜடேஜாவின் கேப்டன்ஷி குறித்து மனம் திறந்த தோனி!

எப்படியாவது பாரதியின் மனதை மாற்றி பாரதியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெண்பா பிளான் போட்டு கொண்டிருக்கிறார். தற்போது பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இதற்கு இடையே வெண்பாவின் அம்மா ஷர்மிளா பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க நினைக்கிறார். இப்படி, பாரதி கண்ணம்மா தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அருண் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாரதி கதாபாத்திரத்தில் திருமதி செல்வம் சீரியல் மூலமாக பிரபலமான சஞ்சய் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அருண் சீரியலில் இருந்து விலகியுள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here