சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – ஜடேஜாவின் கேப்டன்ஷி குறித்து மனம் திறந்த தோனி!

0
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு - ஜடேஜாவின் கேப்டன்ஷி குறித்து மனம் திறந்த தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு - ஜடேஜாவின் கேப்டன்ஷி குறித்து மனம் திறந்த தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கவனத்திற்கு – ஜடேஜாவின் கேப்டன்ஷி குறித்து மனம் திறந்த தோனி!

இப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் சில பல மாற்றங்கள் நிகழ்ந்து ஓய்ந்திருக்கும் வேளையில், ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சி குறித்து தோனி பகிர்ந்திருக்கும் சில தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

இந்த ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) சீசனில் முதல் 8 ஆட்டங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கடந்த ஆட்டத்தில் தலைமை பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்தார். IPL 15 வது சீஸனின் ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை மிகவும் பரபரப்பாக பேசப்படக்கூடிய இடத்தில் CSK அணி இருந்து வருகிறது. அதாவது, மார்ச் 26ம் தேதி அன்று இந்த சீசனின் முதல் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக CSK அணியின் கேப்டன் பொறுப்பை ஜடேஜாவிடம் ஒப்படைப்பதாக தோனி அறிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

இந்த ஷாக்கிங் தகவல் ஊடகங்களில் அதிகம் பேசும் பொருளாக மாறியது. தொடர்ந்து ஜடேஜாவின் தலைமையில் செயல்பட்ட CSK அணி முதல் சில போட்டிகளில் தொடர் தோல்வியை தழுவியது. இதனால் ஜடேஜாவின் கேப்டன்ஷி சர்ச்சைக்குள்ளானது. தொடர்ந்து அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று CSK அணி ஓரளவுக்கு சரிவில் இருந்து மீண்டது. இந்த நிலையில், மீண்டுமாக CSK அணியின் தலைமை பொறுப்பை தோனியிடம் ஒப்படைப்பதாக அறிவித்தார் ஜடேஜா. தொடர்ந்து தோனி தலைமையிலான CSK அணி, சன் ரைசர்ஸுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் அட்டகாசமாக வெற்றி பெற்றிருந்தது.

அந்த வகையில், இதுவரை பார்ம் அவுட்டில் இருந்த தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 99 ரன்கள் எடுக்க, இவருடன் சேர்ந்து டெவோன் கான்வே சிறப்பான பட்னர்ஷிப்பை அளித்திருந்தார். மேலும், முகேஷ் சவுத்ரியின் பந்துவீச்சால் 13 ரன்கள் வித்தியாசத்தில் CSK அணி வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய தோனி, ஜடேஜாவின் கேப்டன்ஷி பற்றிய சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது, ‘ஜடேஜா இந்த ஆண்டு கேப்டனாக இருப்பார் என்று கடந்த சீசனில் எனக்கு தெரியும். அதனால், முதல் 2 ஆட்டங்களில் அவருடைய கேப்டன்ஷியை மேற்பார்வை செய்தேன். தொடர்ந்து அவராக முடிவு எடுக்க வேண்டும் என எண்ணினேன்.

கோபியின் காதலி யார் என்பதை கண்டுபிடிக்க முயலும் பாக்கியா – சீரியலில் புதிய திருப்பம்! ப்ரோமோ ரிலீஸ்!

ஆனால் எல்லா நேரங்களிலும் நாம் ஒருவருக்கு ஸ்பூன் எடுத்து ஊட்ட முடியாது. ஒரு அணியில் கேப்டனாக இருந்தால் நிறைய அழுத்தங்கள் இருக்கும். இது அந்த வீரரின் செயல்திறனை கூட பாதிக்கும். அதே போல ஜடேஜாவுக்கும் அவரது கேப்டன்ஷி நிறைய அழுத்தம் கொடுத்தது. அதனால் அவரது செயல்திறனும் பாதிக்கப்பட்டது. அவரால் சரியாக பேட் செய்யவோ, பந்து வீசவோ முடியவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல தான், கேப்டன் மாற்றத்தால் இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெறவில்லை. எங்களுக்கு கிடைத்த இலக்கு நன்றாக இருந்தது. ஆரம்ப ஓவர்களில் பேட்டிங் மூலம் சிறப்பாக செயல்படுத்தினோம். அதே போல பனிப்பொழிவு இருந்ததால் நன்றாக பந்து வீச முடிந்தது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here