BEL நிறுவனத்தில் BE படித்தவருக்கு வேலை – நேர்காணல் மட்டுமே !!!
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் Trainee Engineer, Project Engineer பணிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியது. இந்த பணிகளுக்கு என மொத்தமாக 63 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு Online மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு பணியாளர்கள் தேர்வில்லாமல் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, கல்வித்தகுதி ஆகிய விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:
Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் Trainee Engineer I பணிக்கு 26 பணியிடங்கள் என்றும், Project Engineer I பணிக்கு 37 பணியிடங்கள் என்றும் மொத்தமாக 63 பணியிடங்கள் காலியாக உள்ளது என்று வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Electronic / Mechanical / Computer Science / Electrical ஆகிய பாடப்பிரிவில் B.E./ B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும். Trainee Engineer I பணிக்கு ரூ. 200/- மற்றும் Project Engineer I பணிக்கு ரூ. 500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC,ST, PwBD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளது.
Join Our TNPSC Coaching Center
Trainee Engineer I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 1 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்றும், Project Engineer I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 வருடம் பணிபுரிந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 28 வயது முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம் ஆகும். மேலும் OBC – 3 ஆண்டுகள், SC / ST – 5 ஆண்டுகள், PwBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பதாரர் தகுதியின் அடிப்படையில் shortlist செய்யப்பட்டு அதன்பின் தகுதியானவர்கள் மட்டும் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.30,000/- முதல் ரூ.55,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 06.04.2022 அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்றே விண்ணப்பதாரர்கள் கீழுள்ள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அங்கு இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உடனே சமர்ப்பித்து பயனடையலாம்.