ரூ.60000/- சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் தேர்வு இல்லாமல் வேலை..!

0
பெல் நிறுவனத்தில் தேர்வு இல்லாமல் வேலை
பெல் நிறுவனத்தில் தேர்வு இல்லாமல் வேலை

ரூ.60000/- சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் தேர்வு இல்லாமல் வேலை..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ப்ராஜெக்ட் இன்ஜினியர் மற்றும் விசிட்டிங் மருத்துவ அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி மொத்தம் 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ப்ராஜெக்ட் இன்ஜினியருக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2022 மற்றும் VMO பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2022.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Project Engineer – I, Post Code: PE-I (D&E-CS) 5
  • Project Engineer – I, Post Code: PE-I (SSI) 3
  • Project Engineer – I, Post Code: PE-I (SDSC) 2
  • Visiting Medical Officer 1 என்றுமொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Project Engineer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் அல்லது கம்யூனிகேஷன் அல்லது எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் அல்லது டெலிகம்யூனிகேஷன் அல்லது மெக்கானிக்கல் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் அல்லது கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகியவற்றில் BE அல்லது B.Tech அல்லது B.Sc இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.
  • Visiting Medical Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் M.B.B.S முடித்திருக்க வேண்டும். மேலும் மாநில அரசு-DGFASLI அல்லது M.B.B.S மூலம் அங்கீகரிக்கப்பட்ட குறைந்தபட்சம் மூன்று மாத கால தொழில்துறை ஆரோக்கியத்திற்கான பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தொழில்துறை ஆரோக்கியத்தில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • 01.12.2021 தேதியின்படி Project Engineer பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகவும், Visiting Medical Officer க்கு அதிகபட்ச வயது வரம்பு மேற்கண்ட தேதியின்படி 55 ஆண்டுகள் ஆகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பின்னர் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலில் உள்ள செயல்திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Project Engineer 1st year ரூ. 40000
  • Project Engineer 2nd year ரூ. 45000
  • Project Engineer 3rd year ரூ. 50000
  • Project Engineer 4th year ரூ. 55000
  • Visiting Medical Officer ரூ. 60000 என்று ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
  • ப்ராஜெக்ட் இன்ஜினியர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ. 500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். PwBD, SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் BEL ஆட்சேர்ப்பு 2021 இல் VMO பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் கிடையாது.

BEL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு வந்து சேரும் படி அனுப்ப வேண்டும். ப்ராஜெக்ட் இன்ஜினியருக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 06.01.2022 மற்றும் VMO பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2022. இப்பணிக்கு கால அவகாசம் முடிவதால் விருப்பமுள்ளவர்கள் விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Project Engineer 1

Visiting Medical Officer

Application Form

Official Website

Best TNPSC Coaching Center – Join Now

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!