BECIL நிறுவனத்தில் ரூ.25,000 ஊதியத்தில் Supervisor பணிவாய்ப்பு – இன்றே விண்ணப்பியுங்கள்..!
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) ஆனது சமீபத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Business Executive, Sales Assistant, Proofreader, Marketing Supervisor பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
BECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்டில் (BECIL) Business Executive, Sales Assistant, Proofreader, Marketing Supervisor ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 05 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Business Executive பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduation Degree மற்றும் Advertisement, Marketing பாடப்பிரிவில் PG Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Sales Assistant பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Sales, Marketing, Accounting பாடப்பிரிவில் Graduation Degree மற்றும் Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Proof Reader பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Marketing Supervisor பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் M.Com Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணி சார்ந்த துறைகளில் 02 வருடம் முதல் 04 வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என BECIL நிர்ணயித்துள்ளது. Sales Assistant பணிக்கு ரூ.20,000/- ஊதியம் அளிக்கப்படும் என்றும், மற்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. SC / ST / EWS / PH பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.450/- என்றும் மற்ற அனைத்து வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த BECIL நிறுவன பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறுதி நாளுக்குள் (10.06.2022) பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.