ஏப்ரல் 13 திரைக்கு வரும் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ – அதிகாரபூர்வ அறிவிப்பு! ரசிகர்கள் உற்சாகம்!
இளைய தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 பீஸ்ட்டு படம் தயாராகி வரும் நிலையில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் பீஸ்ட் படத்தின் பாடல்கள் வெளியாகியது. தற்போது படம் ரிலீஸ்க்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது.
தளபதி 65 அப்டேட் :
தமிழ் சினிமா துறைக்கு 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உலகளவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல கோடி ரசிகர்களை கொண்ட இளைய தளபதி விஜய் நடிக்கும்” பீஸ்ட்” படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இது தளபதியின் 65 வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்புகளையும், பல எதிர்பார்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 – வலுக்கும் கோரிக்கை!
தற்போது இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் இசையமைப்பில் அரபிக்குத்து பாடல் ஒன்று வெளியாகியிருந்தது. பாடல் வெளியேறியபோது ஆரம்பத்தில் என்னடா வசனமே புரியல என ஒரு பக்க தரப்பினர் கமெண்ட் அடித்தாலும் நமது தளபதி ரசிகர்களோ அரபிக் குத்து பாடலை விழா போன்று கொண்டாடி வருகின்றனர். இதை தொடர்ந்து மேலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் தளபதி விஜய் அவர்கள் வேற லெவல் காஸ்டியூம் அணிந்து மாஸ் காட்டியுள்ள ‘ஜாலியோ ஜிம்கானா’ சமீபத்தில் வெளியானது.
இந்த பாடலை கேட்ட ரசிகர்கள் கண்ணே படும் அளவுக்கு விஜய் அவர்களின் குரலும், நடனமும் சான்சே இல்ல என்று சொல்லும் ரசிகர்கள் மத்தியில் பாடல் தாறு மாறு ஹிட் கொடுத்து வருகிறது. படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக வரக்கூடிய ஒவ்வொரு அப்டேட்களும் உள்ளது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 13ம் தேதி விஜய்யின் பீஸ்ட் உலக அளவில் ரிலீஸ் ஆக உள்ளதாம். இவ்வாறு அதிரடியாக சன் பிக்சர்ஸ் விஜய்யின் 65 படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை மென்மேலும் குஷிப்படுத்தியுள்ளது.