BB Ultimate Promo | வனிதாவை வெளுத்து வாங்கிய போட்டியாளர்கள்! டாஸ்கை மதிக்காததால் பதிலடி!

0
BB Ultimate Promo | வனிதாவை வெளுத்து வாங்கிய போட்டியாளர்கள்! டாஸ்கை மதிக்காததால் பதிலடி!
BB Ultimate Promo | வனிதாவை வெளுத்து வாங்கிய போட்டியாளர்கள்! டாஸ்கை மதிக்காததால் பதிலடி!
BB Ultimate Promo | வனிதாவை வெளுத்து வாங்கிய போட்டியாளர்கள்! டாஸ்கை மதிக்காததால் பதிலடி!

“பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 2 நாட்கள் நடைபெற்று வரும் நிலையில், அதில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு போல டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய பரிமாணமான பிக்பாஸ் அல்டிமேட் கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களின் ஒருவராக சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் களமிறங்கினார். கடந்த முறை பிக்பாஸ் சீசன் 3ல் அவர் கலந்து கொண்ட போது கூட நியாயமாக நடந்து கொண்டார். ஆனால் தற்போது அவருடைய நடவடிக்கை அனைத்துமே போட்டியாளர்களை முகம் சுளிக்க செய்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட டாஸ்குகளை அவர் சரியாக செய்வதில்லை.

வெண்பா வீட்டுக்கு செல்லும் பாரதி, திட்டமிட்டு விரட்டும் கண்ணம்மா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

நேற்றும் சரியாக சில டாஸ்குகள் அவர் செய்யவில்லை. இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பு போல டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் சக போட்டியாளர்கள் ஒருவரை அமர வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த கேள்விகளை கேட்க வேண்டும். அதில் நடுவில் இருக்கும் போட்டியாளர் சரியாக பதில் சொல்ல வேண்டும். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் சர்ச்சை நாயகி வனிதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது அனிதா வனிதாவிடம் எங்கே கேப் கிடைத்தாலும் அதில் நீங்க சண்டை போடுவது எல்லாமே கன்டென்ட்காக தான் என மக்கள் மத்தியில் கேள்வி இருக்கிறது என அனிதா கேட்க, அதை நீங்கள் மக்களிடம் தான் கேட்க வேண்டும் என வனிதா சொல்கிறார். அப்போது இந்த மீட் தேவையே இல்லையே என அனிதா சொல்ல நான் உங்களை வர சொல்லவில்லை என வனிதா சொல்கிறார். பின் சினேகன் ஒரு கேள்வி கேட்க, அதற்கு அவரிடம் வனிதா திரும்பி கேள்வி கேட்கிறார். அதனால் சினேகன் கோபப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!