
பிப்ரவரி 5ம் தேதி 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!
குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில், பிப்ரவரி 5ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
குஜராத் மாநிலத்தில் திங்கட்கிழமையான நேற்றைய நிலவரப்படி மொத்தம் 6,679 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஜனவரி 10ம் தேதிக்குப் பிறகு இந்த எண்ணிக்கை மிகக் குறைவு, மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,60,659 ஆக உள்ளது என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக அதிக காலமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இப்போது மீண்டும் திறக்கப்படுகின்றது. முதல் மற்றும் 2ம் அலையின் பாதிப்புகளை கடந்து கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வகை பரவல் காரணமாக தான் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் குழந்தைகளைப் பாதுகாக்கவும் மாநிலத்தில் COVID-19 நோய் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து குஜராத்தில் பள்ளிகள் மூடப்பட்டன.
TNPSC அறநிலையத்துறை, கூட்டுறவுத்துறை வேலைவாய்ப்பு 2022 – முக்கிய அறிவிப்பு!
மாநிலத்தில் தற்போது நிலைமை சீரடைந்து வருவதால், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்கலாம் என்று தெரிகிறது. குஜராத் பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்த முடிவை பிப்ரவரி 5 அன்று மாநில முதல்வர் பூபேந்திர படேல் எடுக்க உள்ளார். ஆனால் அதுவரை 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.