வெண்பா வீட்டுக்கு செல்லும் பாரதி, திட்டமிட்டு விரட்டும் கண்ணம்மா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
வெண்பா வீட்டுக்கு செல்லும் பாரதி, திட்டமிட்டு விரட்டும் கண்ணம்மா - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
வெண்பா வீட்டுக்கு செல்லும் பாரதி, திட்டமிட்டு விரட்டும் கண்ணம்மா - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
வெண்பா வீட்டுக்கு செல்லும் பாரதி, திட்டமிட்டு விரட்டும் கண்ணம்மா – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் சில நாட்கள் வெண்பா வீட்டிற்கு சென்று தங்க நினைக்கும் பாரதியை, திட்டமிட்டு கண்ணம்மா அங்கிருந்து விரட்டுவது போல வெளியாகி இருக்கும் சமீபத்திய ப்ரோமோ பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

பாரதி கண்ணம்மா

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பல நூற்றுக்கணக்கான சீரியல்களில் அதிகபட்ச மக்களின் மனம் கவர்ந்து சூப்பர் ஹிட் ஆக வெளியாகி வரும் ஒரு சீரியல் ‘பாரதி கண்ணம்மா’. விஜய் டிவியில் சுமார் 3 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 700 எபிசோடுகளை கடந்து வெளியாகி கொண்டிருக்கும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் எப்போதும் ரசிகர்களின் வரவேற்பை பெறத்தவறியதில்லை. அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் தற்போதைய கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது.

விஜய் டிவி “குக் வித் கோமாளி சீசன் 3” அதிர்ச்சி அருண் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

அதாவது, ஒரு விஷேச நிகழ்வுக்கு செல்லும் கண்ணம்மா கணவர் இல்லாதவர் என்றும் லட்சுமிக்கு அப்பா இல்லை என்றும் சில அவமானங்களை சந்திக்க லட்சுமியின் அப்பா யார் என்னும் உண்மையை இன்னும் ஒரு சில நாட்களில் சொல்வதாக சவால் விடுகிறார் கண்ணம்மா. இதனுடன் லட்சமியின் அப்பா பாரதி என்கிற உண்மையை உலகிற்கு சொல்வதாக சௌந்தர்யா மற்றும் பாரதியிடம் ஏற்கனவே சவால் விட்டிருக்கிறார் கண்ணம்மா.

இதற்கிடையில் வெண்பாவும் தன் பங்கிற்கு ஒரு தற்கொலை நாடகத்தை நடத்தி, பாரதியை தன் வசமாக்கி விடுகிறார். இப்போது வெண்பாவுடன் சேர்ந்து அவரது வீட்டில் தங்குவதற்காக முடிவு செய்திருக்கிறார் பாரதி. இதனை தொடர்ந்து ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கிக்கொண்டிருந்த நிலையில், புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் திட்டமிட்டபடி, வெண்பா வீட்டிற்கு ஹேமாவுடன் செல்லும் பாரதியை ஆரத்தி எடுத்து வரவேற்கிறார் வெண்பா.

பிறகு சிறிது நேரம் கழித்து அந்த காலனியின் செக்கரட்டரி என்று சொல்லிக்கொண்டு சிலர் அங்கு வருகிறார்கள். அவர்கள், வெண்பாவுடன், பாரதி தங்கி இருப்பதை பார்த்து, நீங்கள் ஒரு டாக்டர் தானே. இப்படி கல்யாணம் ஆகாத பெண்ணோடு எப்படி ஒன்றாக இருக்கிறீர்கள். இது தப்பாக தெரியவில்லையா. உடனே அவரை வீட்டை விட்டு அனுப்புங்கள் என்று சொல்கிறார்கள். இதனை கேட்டு கோபமடையும் வெண்பா, முடியாது என்றால் என்ன செய்வீர்கள் என்று சொல்ல போலீசை கூப்பிடுவேன் என அவர்கள் மிரட்டுகிறார்கள்.

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” திருமண வைபோக பத்திரிகை – வைரலாகும் பதிவு! கலாய்த்த நெட்டிசன்கள்!

இதனால் பயப்படும் பாரதி, ஹேமாவை கூட்டி கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார். பாரதியை உற்சாகமாக ஹாய் சொல்லிவிட்டு அவரை சந்திக்க வருகிறார் கண்ணம்மா. அதாவது, வெண்பா வீட்டிற்கு வந்து மிரட்டிய நபர்கள் கண்ணம்மாவிடம் மகிழ்ச்சியாக பேசி செல்கின்றனர். இவர்களை பார்த்து பாரதி அதிர்ச்சியாவதை போல அந்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!