விஜய் டிவி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் பாவ்னி? ரசிகர்கள் ஷாக்!
தமிழ் சின்னத்திரையில் ஒரு புதுவிதமான ரியாலிட்டி நிகழ்ச்சி தான் “பிக்பாஸ்”. இந்த ஆண்டு ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டு தற்போது 80 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டு தற்போது 11 வாரம் முடிவடைந்துள்ளது. வாரந்தோறும் ஒருவர் வெளியேற்றப்பட்டு தற்போது டாப் 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். மேலும் இந்த வாரம் பிரியங்கா ராஜு, வருண், நிரூப், பாவ்னி, அக்ஷரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது மக்களின் விருப்பமான பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த வில்லி வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!
போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து போட்டியாளர்களை பார்த்து விட்டு இனி எப்படி விளையாட வேண்டும் என டிப்ஸ் கொடுத்து செல்கின்றனர். அதை பார்க்க மிகவும் உணர்ச்சிகரமாக இருக்கிறது. மேலும் புதிதாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த சஞ்சீவ் மற்றும் அமீர் அவர்களுடைய வாழ்க்கை கதையை சொன்னார்கள். அதை கேட்டதும் ரசிகர்கள் மனம் உருகியது. இந்த வாரம் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதால் TRPயில் பெரிய மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குட்டி பாண்டியனுடன் விளையாடும் மீனா – வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் மக்களிடம் குறைவான வாக்குகள் பெற்று யார் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இது குறித்து ஓட்டிங் பட்டியல் வெளியானது. அதில் பாவ்னி குறைவான வாக்குகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறார். இந்த சீசனில் இதுவரை ஒரே நாளில் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படவில்லை. மேலும் இன்னும் குறைவான வாரங்களே இருப்பதால் நிகழ்ச்சியில் எந்த மாதிரி எலிமினேஷன் இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.