“பாரதி கண்ணம்மா” சீரியல் புதிய அகிலுடன் பாரதி எடுத்த செல்பி – வைரலாகும் புகைப்படம்!!

0
"பாரதி கண்ணம்மா" சீரியல் புதிய அகிலுடன் பாரதி எடுத்த செல்பி - வைரலாகும் புகைப்படம்!!
“பாரதி கண்ணம்மா” சீரியல் புதிய அகிலுடன் பாரதி எடுத்த செல்பி – வைரலாகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான “பாரதி கண்ணம்மா” சீரியலில், அகில் கதாபாத்திரம் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், புதிய அகிலுடன் பாரதி எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தனி இடம் உண்டு. TRPயிலும் பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தில் உள்ளது. பல சஸ்பென்ஸ்களுடன் கதை செல்லும் நிலையில், இந்த வாரம் தான் லட்சுமி கண்ணம்மாவின் மகள் என்ற உண்மை வெளியாகி உள்ளது. இன்னும் பல சஸ்பென்ஸ்கள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். மேலும் பாரதியும் கண்ணம்மாவும் கடந்த வாரம் சேர போவது போல காட்டப்பட்டது.

அதன் பின்னர் மீண்டும் இந்த வாரம் சண்டை காட்சிகள் தொடங்கியது. மேலும் கண்ணம்மாவிற்கு பிறந்தது இரட்டை குழந்தைகள் தான் என்ற உண்மை கண்ணம்மாவிற்கு தெரிந்துள்ளது. ஆனால் அது பற்றி கண்ணம்மா இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது தான் லட்சுமியை பாரதியிடம் இருந்து கண்ணம்மா வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்துள்ளார். இனி வரும் எபிசோடுகளில் அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர் – களமிறங்கும் சீரியல் நடிகை!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அஞ்சலியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் ஏற்கனவே இருந்த அகிலனுக்கு பதிலாக வேறு ஒருவர் இடம் பெற்றிருந்தார். பழைய அகில் விலக்கியதற்கான காரணத்தையும் சொல்லி விடியோவாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் புதிய அகிலுடன் பாரதி எடுத்த செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். அந்த அகில் போல இவரும் அழகாக தான் இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!