விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர் – களமிறங்கும் சீரியல் நடிகை!

0
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர் - களமிறங்கும் சீரியல் நடிகை!
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர் - களமிறங்கும் சீரியல் நடிகை!
விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி போட்டியாளர் – களமிறங்கும் சீரியல் நடிகை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், கலந்து கொள்ள உள்ள 30 போட்டியாளர்களில் ஒருவர் குறித்த விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் 5:

விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. குறிப்பாக கலக்க போவது யாரு, ஜோடி NO1, குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், Mr & Mrs சின்னத்திரை என பல நிகழ்ச்சிகளை சொல்லலாம். அந்த வகையில் பாலிவுடில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சி தொகுப்பாளராக நடிகர் கமல்ஹாசன் வருவது தான். இந்நிலையில் தற்போது நான்கு சீசன் முடிந்து ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.

முடிவுக்கு வரும் ஜீ தமிழ் “பூவே பூச்சூடவா” சீரியல் – வெளியான தகவல்!!

கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக காலதாமதமாக இந்த சீசன் தொடங்கப்பட்டாலும் மக்கள் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த சீசன் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்க உள்ளது, முதற்கட்டமாக டீஸர் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. செப்டம்பர் 10 ஆம் தேதி விநாயக சதுர்த்தி அன்று முதன்முறையாக டீஸர் வெளியாக உள்ளது. கமல் கேமரா முன்னாடி நிற்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இந்த சீசனில் கலந்து கொள்ள உள்ள 30 போட்டியாளர்கள் குறித்த வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 30 போட்டியாளர்களில் ஒருவராக ரியல் நடிகை ஒருவரின் பெயர் பேசப்பட்டு வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்களில் நடித்த பவானி ரெட்டியின் பெயர்தான் அது. பவானி ரெட்டி தமிழ் சினிமாவிலும் பல முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மிக பிரபலமான சீரியல் தொடரான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி ஆகிய சீரியல் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றார். சக சீரியல் நடிகரான பிரதீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் ஒரு வருடத்திலேயே கணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது உறவினர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் ‘இனி அவனே’ என்ற படத்தில் ஆபாசக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!