ஹேமா, லட்சுமியுடன் சேர்ந்து வெண்பா வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் அதற்கான படப்பிடிப்பின் போது வெண்பா ஹேமா, லட்சுமி இருவருடனும் இணைந்து எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவி சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தனி இடம் உண்டு. TRPயிலும் பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சஸ்பென்ஸ் உடன் நகர்ந்து வரும் கதையில், இன்று பாரதியின் மகள் ஹேமா கண்ணம்மாவுடனும், கண்ணம்மா பெற்ற மகள் லட்சுமி பாரதியிடமும் இருக்க உள்ளனர். பாரதி எப்போது ஹேமா, லட்சுமி குறித்த உண்மையை தெரிந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் உள்ளனர்.
மாறனை சந்திக்க மறுக்கும் மாயன், சமாதானப்படுத்தும் நாச்சியார் – இன்றைய எபிசோட்!!
மேலும் அந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரீனா, அவர் தற்போது நிஜத்தில் கர்ப்பமாக இருக்கிறார். ஆனால் சீரியலில் அவருக்கு வயிறு எதுமே தெரியாமல் சிறப்பான நடிப்பின் மூலம் சமாளித்து வருகிறார். அது இந்த சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் வர இருக்கும் எபிசோடுகளில் அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
TN Job “FB
Group” Join Now
என்னதான் வெண்பா வில்லியாக இருந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் செம ஜாலியாக இருக்கிறார். அவரும் ஹேமா மற்றும் லட்சுமியும் சேர்ந்து எடுத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். அதில் சந்தானம் வசனம் அடங்கிய வீடியோ ஒன்றிற்கு காமெடி ஆக கலாட்டா செய்துள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த சீரியலில் அகிலன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மாற்றப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.