கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முயற்சி செய்யும் பாரதி, வெண்பாவை மிரட்டும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

1
கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முயற்சி செய்யும் பாரதி, வெண்பாவை மிரட்டும் கண்ணம்மா - இன்றைய
கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முயற்சி செய்யும் பாரதி, வெண்பாவை மிரட்டும் கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
கண்ணம்மாவை விவாகரத்து செய்ய முயற்சி செய்யும் பாரதி, வெண்பாவை மிரட்டும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்வது குறித்து கண்ணம்மாவின் சித்தியிடம் பேசுகிறார். பின் கண்ணம்மா வெண்பாவை மிரட்ட செல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வது பற்றி நினைத்து கொண்டிருக்கிறார். உடனே இதற்கு முடிவு செய்ய வேண்டும் என அஞ்சலியின் அம்மாவிற்கு போன் செய்கிறார். விவாகரத்து பற்றி பேசினேன் என்னாச்சு என கேட்கிறார். உடனே அவர் இது உடனே பேசவேண்டிய விஷயம் இல்லை என சொல்லி விரைவில் கண்ணம்மாவிடம் நான் பேசுகிறேன் என சொல்கிறார். பாரதி நான் 1 கோடி தருகிறேன் என சொன்னது ஞாபகம் இருக்கிறது அல்லவா என கேட்கிறார்.

அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என அஞ்சலியின் அம்மா சொல்கிறார். மறுபக்கம் வெண்பா வீட்டிற்கு கண்ணம்மா செல்கிறார். கண்ணம்மா என் இரண்டாவது குழந்தை போட்டோவை காட்டு என சொல்ல, போட்டோ எல்லாம் இல்லை என நினைத்து பார்க்கிறார். பின் அவள் எப்படி இருப்பாள் என கேட்க பிச்சை எடுக்கிற குழந்தை எப்படி இருப்பாள் என கேட்கிறார். உடனே கண்ணம்மா நீ பேசியது எல்லாம் ரெக்கார்ட்செய்துவிட்டேன் என் அத்தையிடம் காட்ட போகிறேன் என சொல்கிறார்.

குக் வித் கோமாளி சுனிதா வெளியிட்ட வீடியோ – சும்மா இருக்கும் போது இதுதான் வேலை!

வீட்டில் ஹேமா அஞ்சலி சௌந்தர்யா பேசிக் கொண்டிருக்க, வீட்டு வேலை செய்பவர் கையில் பச்சை குத்திருக்கிறார். அதை பார்த்ததும் ஹேமா என்ன இது என கேட்கிறார். இதான் பச்சை குத்துவது யாரவது ரொம்ப பிடித்தவர்களை காலம் முழுவதும் மறக்காமல் இருக்க இதை செய்வார்கள் என சொல்கிறார். உடனே ஹேமா பாரதியின் பெயரை பச்சை குத்த இருப்பதாக சொல்கிறார். அதை பார்த்து பாரதி பாசத்தில் ஹேமாவை கொஞ்சுகிறார். உன்னை என்னிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது என சொல்கிறார்.

இந்தியன் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – சிறப்பு சேவை அறிமுகம்!

வெண்பா சௌந்தர்யா வீட்டிற்கு வந்து ஹேமாவை கடத்துவது போல கண்ணம்மாவிற்கு கனவு வருகிறது. உடனே கண்ணம்மா சௌந்தர்யாவிற்கு கண்ணம்மா போன் செய்கிறார். கேட்ட கனவு ஒன்று வந்தது ஹேமாவை என்னிடம் கொடுத்திருங்க எனக்கு அவள் நினைப்பாகவே இருக்கிறது. சீக்கிரமாக ஹேமாவை என்னிடம் அனுப்பி வைங்க என கண்ணம்மா கெஞ்சுகிறார். உடனே சௌந்தர்யா என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. DNA test இன்னும் 6 மாதம் கழித்துதான் செய்வார்களாம். அதுவரை கதையை இழுப்பார்களாம். பொறுமை உள்ளவர்கள் தொடர்ந்து பார்க்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!