அப்பா அம்மாவை சேர்த்து வைக்க சொல்லி சௌந்தர்யாவிடம் அழும் லட்சுமி, ஷர்மிளாவிடம் நடிக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
அப்பா அம்மாவை சேர்த்து வைக்க சொல்லி சௌந்தர்யாவிடம் அழும் லட்சுமி, ஷர்மிளாவிடம் நடிக்கும் வெண்பா - இன்றைய
அப்பா அம்மாவை சேர்த்து வைக்க சொல்லி சௌந்தர்யாவிடம் அழும் லட்சுமி, ஷர்மிளாவிடம் நடிக்கும் வெண்பா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
அப்பா அம்மாவை சேர்த்து வைக்க சொல்லி சௌந்தர்யாவிடம் அழும் லட்சுமி, ஷர்மிளாவிடம் நடிக்கும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா வீட்டிற்கு சென்று வந்த அஞ்சலி அங்கே வக்கீல் நோட்டீஸ் வந்ததை பார்த்து லட்சுமி வருத்தப்படுவதாக சொல்கிறார். பின் லட்சுமி சௌந்தர்யாவிற்கு போன் செய்து அப்பா அம்மா பிரிய கூடாது என அழுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில்,வேணு சௌந்தர்யாவிடம் ஸ்ரீலங்கா நிலைமை பற்றி பேச சௌந்தர்யா நம்ம வீட்டு நிலைமையே மோசமாக இருக்கிறது. லட்சுமிக்கு உண்மை தெரிந்ததை அடுத்து என்ன நடக்குமோ என பதட்டமாக இருப்பதாக சொல்கிறார். அப்போது வேணு அஞ்சலி எங்கே என கேட்க, அவள் வந்து கொண்டே இருக்கிறாள், முக்கியமான விஷயம் எதோ சொல்ல வேண்டும் என சொன்னதாக சொல்கிறார். பின் அஞ்சலி வர அகில் என்ன முக்கியமான விஷயம் என கேட்கிறார். அப்போது அஞ்சலி கண்ணம்மா பாரதி மாமா கேஸ் விசாரணைக்கு வருவதாக சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

லக்ஷ்மியை தான் எப்படி சமாதானப்படுத்துவது என தெரியவில்லை என சொல்கிறார். அகில் அதை கேட்டு கோவப்பட இதான் அன்னைக்கே அண்ணி பற்றி பேசுங்க என சொல்கிறார். அப்போது மல்லிகா லெட்டர் வந்துள்ளதாக கொண்டு வந்து கொடுக்கிறார். வேணு கண்ணம்மாவிற்கு போலவே பாரதிக்கு நோட்டீஸ் வந்துள்ளதாக சொல்கிறார். பின் சௌந்தர்யாவிற்கு லட்சுமி போன் செய்கிறார். லட்சுமி அழுது கொண்டே பேச அம்மா கோர்ட்டிற்கு போக வேண்டுமாம் அப்பறம் அப்பா விவாகரத்து கொடுத்துவிட்டால் அம்மா அப்பா சேரவே மாட்டார்களாம் என சொல்கிறார்.

நீங்க தான் அப்பாவிடம் பேச வேண்டும் அம்மாவை விட்டு அப்பா பிரிய கூடாதுங் அவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என சொல்கிறார்.நீங்க சொன்ன அப்பா கேட்பார் பிரிய வேண்டாம் என சொல்லுங்க என சொல்கிறார். உங்களை தான் நான் நம்புகிறேன் என சொல்கிறார். பின் சௌந்தர்யா நான் பாரதியிடம் எப்படி இந்த விஷயத்தை பேச போகிறேன் என தெரியாமல் இருக்கிறார். பின் கண்ணம்மா லக்ஷ்மியை படிக்க சொல்ல ஆனால் லக்ஷ்மியால் படிக்க முடியாமல் இருக்கிறார். கண்ணம்மா ஏன் படிக்காமல் இருக்கிறாய் என கேட்க அப்பா நியாபகமாக இருப்பதாக லட்சுமி சொல்கிறார்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

லட்சுமியிடம் இது பெரியவர்கள் விஷயம் என சொல்ல, லட்சுமி அப்பாவை சாப்பிட கூட வற்புறுத்த வேண்டியதாக இருந்தது. ஆனால் விவாகரத்து விஷயத்தில் எப்படி பாட்டி சொல்வதை கேட்பார் என கேட்கிறார். இப்போ விவாகரத்து கொடுத்துவிட்டால் தூரத்தில் இருந்து கூட கூப்பிட முடியாது என சொல்கிறார். கண்ணம்மாவிற்கு என்ன சொல்வது என தெரியாமல் இருக்கிறார். பின் வெண்பா மாப்பிள்ளை பார்க்க கிளம்பி வர ஷர்மிளா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்.

என்ன பேபி என்ன ஆச்சு என கேட்க நீங்க தான அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ள சொன்னீங்க அதனால் தான் இப்பவே நான் தயாராகி வந்திருக்கேன் நேற்று ஓடுனவன் ஏன் ஓடுனான் என தெரியவில்லை இந்த முறை அப்படி ஆகாது என சொல்கிறார். பின் வெண்பா அதே ஹோட்டல் அட்ரஸ் தான என சொல்ல ஆமாம் என ஷர்மிளா சொல்கிறார். எல்லாம் தயாராக இருக்கிறது நீ போகலாம் என சொல்கிறார். வெண்பா கிளம்ப மாப்பிள்ளை முடிந்துவிட்டது என நல்ல செய்தி உடன் தான் வருவேன் என வெண்பா சொல்கிறார்.

பின் பாரதி கிளம்பி கொண்டிருக்க அப்போது ஹேமா வருகிறார். ஹேமா இன்று மதியம் சீக்கரம் வந்துருங்க உங்களுக்கு சப்ரைஸ் இருப்பதாக சொல்கிறார். என்ன சப்ரைஸ் என கேட்க, போன வாரம் எங்க பள்ளியில் பேச்சு போட்டி நடத்தினார்கள் அதில் எனக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது என சொல்கிறார். பின் லட்சுமி கலந்து கொள்ளவில்லையா என கேட்க ஹேமா டாபிக் அது போல என சொல்கிறார். அப்பாவை பற்றி பேச சொன்னதாக சொல்ல, லட்சுமி தான் அப்பாவை பார்த்ததே இல்லையே அதனால் தான் கலந்து கொள்ளவில்லை என சொல்கிறார். அவளின் அப்பா ஏன் இப்படி இருக்கிறார் என ஹேமா கோபப்படுகிறார். பின் பாரதி அதை கேட்டு கோபப்படுகிறார். லட்சுமி எப்போ பார்த்தாலும் அப்பா அப்பா என இருக்கிறாள் அப்பறம் நான் தான் அப்பா என சொன்னால் என்ன செய்வது என தெரியாமல் பாரதி இருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!