தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

29.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சிலஇடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழைபெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி), விருதுநகர்‌, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர்‌,ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம் – தமிழக மாணவர்கள் கவனத்திற்கு! அமைச்சர் அறிவிப்பு!

30.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

31.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

01.06.2022, 02.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 24 மணி நேரத்கதிற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

29.05.2022, 30.05.2022: லட்சவு, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய குமரிக்கடல்‌ – தென்தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!