ஹேமாவை வெளியே அழைத்து சென்ற பாரதி, சௌந்தர்யாவிடம் கெஞ்சிய லட்சுமி – இன்றைய எபிசோட்!

0
ஹேமாவை வெளியே அழைத்து சென்ற பாரதி, சௌந்தர்யாவிடம் கெஞ்சிய லட்சுமி - இன்றைய எபிசோட்!
ஹேமாவை வெளியே அழைத்து சென்ற பாரதி, சௌந்தர்யாவிடம் கெஞ்சிய லட்சுமி - இன்றைய எபிசோட்!
ஹேமாவை வெளியே அழைத்து சென்ற பாரதி, சௌந்தர்யாவிடம் கெஞ்சிய லட்சுமி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பாவை ரோஹித் மீண்டும் வெறுப்பேத்த அவர் கோவப்பட்டு சத்தம் போடுகிறார். பின் பாரதி ஹேமாவை அழைத்து கொண்டு வெளியே செல்ல ஹேமா அம்மா நியாபகமாக இருப்பதாக சொல்கிறாள் அதனால் பாரதிக்கு கோவம் வருகிறது. பின் லட்சுமி அப்பா மனதை நீங்க தான் மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், வெண்பா தூங்கி கொண்டிருக்க அப்போது சாமி பாடல் சத்தமாக கேட்கிறது. ரோஹித் பயங்கர சத்தமாக சாமி கும்பிட்டு இருக்கிறார். வெண்பா தூக்கத்தில் எழுந்திருக்க சாந்தி மீது தலைகாணியை போடுகிறார். பின் சாந்தி பதறி எழுந்திருக்க என்ன ஒரே சத்தமாக இருக்கிறது என வெண்பா கேட்கிறார். பின் சாந்தியும் வெண்பாவும் எழுந்து வந்து பார்க்க வீடெல்லாம் புகையாக இருக்கிறது. பின் ரோஹித்திடம் ஏன் இப்படி சத்தமாக சாமி கும்பிடுகிறாய் என வெண்பா கேட்கிறார்.

ஆன்டி தான் சீக்கிரமாக என் மகளின் மனதில் இடம் பிடிக்க சொல்லிவிட்டு சென்று இருக்கிறார். அதனால் தான் நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். அவர் நிச்சயம் எனக்கு அருள் புரிவார் என ரோஹித் சொல்ல, ரோஹித்தின் நடவடிக்கை பார்த்து வெண்பா கடுப்பாகிறார். மறுபக்கம் வயதான தம்பதி விக்ரம் மருத்துமனைக்கு வருகிறார். அவர்கள் உள்ளே வந்து விக்ரமை பார்க்க வேண்டும் என் பெயர் சுந்தராமன் இது என் மனைவி ஜானகி நாங்க விக்ரமை பார்க்க வேண்டும் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின் அவர்களை காத்திருக்க சொல்ல விக்ரம் உடனே வந்துவிடுகிறார். அவர் விக்ரமை பார்த்து புதிதாக மருத்துவமனை கட்டி இருப்பதாக சொன்னாய் என்னால் அப்போது வர முடியவில்லை. இது என் மனைவி அவளுக்கு உடம்பு சரியாக இல்லை அடிக்கடி மயக்கம் மூச்சுத்திணறல் வருகிறது. அதனால் தான் அவளை பார்த்துவிட்டு உன்னையும் பார்க்கலாம் என வந்தோம் என சொல்கிறார். கண்டிப்பாக அவங்களுக்கு சரியாகிவிடும் நல்ல டாக்டர்ஸ் இருக்காக என விக்ரம் சொல்கிறார்.

மறுபக்கம் ஹேமாவை பாரதி வெளியே அழைத்து சென்று ஐஸ்கிரீம் வாங்கி கொடுக்கிறார். இன்னைக்கு உங்களுக்கு வேலை இல்லையா என ஹேமா கேட்க என்னுடைய ஹேமாவிற்காக நான் வேலை எல்லாம் விட்டுவிட்டு வந்துவிட்டு வந்திருக்கிறேன் என சொல்கிறார். பின் ஹேமா அருகில் ஒருவர் குடும்பத்துடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதை பார்த்து வருத்தப்படுகிறார். எனக்கும் அம்மா இருந்தால் இப்படி தான இருக்கும் என சொல்ல நாமளும் இதே போல தான சந்தோசமாக இருக்கிறோம் என பாரதி சொல்கிறார்.

4 முக்கிய நகரங்களுக்கு விமான சேவை நிறுத்தம் – மக்கள் அவதி!

என்னுடைய அம்மா எங்கே நீங்க யாருக்கு விவாகரத்து கொடுக்க இருக்கீங்க என ஹேமா மீண்டும் கேட்க பாரதி கோபப்படுகிறார். யார் சொன்னதை கேட்டு இப்படி எல்லாம் பேசுகிறாய் என பாரதி கேட்க ஹேமா யாரும் என்னிடம் சொல்லவில்லை. அன்னைக்கு ஒரு வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் போட்ட அங்கிளிடம் நீங்க விவாகரத்து கண்டிப்பாக வேண்டும் என சொன்னீங்க அதற்கு அவர் கண்டிப்பாக கிடைக்கும் என சொன்னார் என சொல்கிறார். பாரதி அதை கேட்டு எதுவும் பேசாமல் இருக்கிறார்.

பின் பில் கொடுக்க சென்ற பாரதி விவாகரத்து வாங்க இருப்பது உன்னுடைய சமையல் அம்மாவிற்கு தான் உன் அம்மா யார் என தெரியாது என நினைக்கிறார். பின் லக்ஷ்மிக்கு சௌந்தர்யா சாப்பாடு கொடுக்க ஹேமாவிற்கு என்ன ஆனது உடம்பு சரியாகிவிட்டதா என கேட்கிறார். அப்போது சௌந்தர்யா வீட்டில் அவளுடைய அப்பா டிரீட்மென்ட் பார்த்தார் என சொல்கிறார். ஹேமா இப்போது பாரதியுடன் வெளியே சென்று இருக்கிறார் என சொல்ல லக்ஷ்மிக்கு கோவம் வருகிறது.

அப்பாவிற்கு ஹேமா மட்டும் தான் பொண்ணா நான் பொண்ணு இல்லையா என்னையும் என் அம்மாவையும் ஏன் ஒதுக்கி வைக்கிறீர்கள். எல்லாரும் ஒரே வீட்டில் இருந்தால் எப்படி இருக்கும் அப்பாவிடம் நீங்க தான் சொல்லி புரிய வைக்க வேண்டும் என சொல்ல சௌந்தர்யா எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். பின் சௌந்தர்யா அங்கே ஒருத்தி யாருக்கு விவாகரத்து கொடுக்க போறீங்க என கேட்கிறாள், இவள் அம்மாவிற்கு கொடுக்க வேண்டாம் என சொல்கிறாள் சீக்கரம் நிலைமை சரியாக வேண்டும் என நினைக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here