அம்மன் வழங்கிய நீதியால் குழப்பத்தில் இருக்கும் பாரதி, அழுது புலம்பிய கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
அம்மன் வழங்கிய நீதியால் குழப்பத்தில் இருக்கும் பாரதி, அழுது புலம்பிய கண்ணம்மா - இன்றைய
அம்மன் வழங்கிய நீதியால் குழப்பத்தில் இருக்கும் பாரதி, அழுது புலம்பிய கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
அம்மன் வழங்கிய நீதியால் குழப்பத்தில் இருக்கும் பாரதி, அழுது புலம்பிய கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மாவின் பொங்கல் போங்க கண்ணம்மா பக்கம் நியாயம் இருப்பதால் பாரதி குழப்பத்தில் இருக்கிறார். பின் கண்ணம்மாவிடம் நான் நாளைக்கு என் வீட்டிற்கு போறேன் என சொல்ல கண்ணம்மா வருத்தம் தாங்க முடியாமல் அழுகிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி பொங்கல் வைத்து கண்ணம்மா பக்கம் நியாயம் இருப்பதை தெரிந்து கொள்கிறார். பின் கண்ணம்மா என் மீது தவறு இல்லை என தெரிந்துவிட்டது என்ன செய்ய போறீங்க என கேட்கிறார். அப்போது பாரதி எதுவும் பேசாமல் கிளம்புகிறார். சௌந்தர்யா பாரதி எங்கே என கேட்க, அவர் கிளம்பிவிட்டார் என சொல்கிறார். ஹேமா லட்சுமி வர என்னை விட்டு ஏன் பொங்கல் வைத்தீர்கள் என கேட்கிறார்கள். அடுத்த முறை சேர்ந்து பொங்கல் வைப்போம் என சௌந்தர்யா சொல்ல, ஹேமா சரி என சொல்கிறார். அப்பா எங்கே என கேட்க முக்கியமான வேலை அதான் கிளம்பிட்டார் என சொல்கிறார்.

மறுபக்கம் பாரதி கண்ணம்மா மீது தவறு இல்லை என பல முறை நடப்பதை நினைத்து பார்க்கிறார். பின் அவர் டெஸ்ட் செய்தது பற்றியும் நினைத்து பார்க்கிறார். அறிவியல் சொல்வதை நம்புவதா, இல்லை ஆன்மிகம் சொல்வதை நம்புவதா என குழப்பத்தில் இருக்கிறார். அதனால் அவர் பயங்கர குழப்பத்தில் இருக்க நான் மனசாட்சி சொல்வதை தான் கேட்க இருக்கிறேன் என சொல்கிறார். பின் சௌந்தர்யா கண்ணம்மாவிடம் பேச பாரதி இனிமேல் திருந்திவிடுவான் என சொல்கிறார்.

கண்ணம்மா எனக்கு நம்பிக்கை இல்லை என சொல்ல, அவன் இவ்வளவு தூரம் வந்தது உன் மீது தப்பு இல்லை என நினைக்கிறான் அதனால் தான் அவன் இவ்வளவு தூரம் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறார். அவன் முன்ன மாதிரி இல்லை எதோ ஒரு விஷயம் நிதானமாக்கி உள்ளது. இந்த குற்ற உணர்ச்சியை நான் அதிகமாக்க இருக்கிறேன் அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் உனக்கு நடந்தது எல்லாம் நல்லது தான் என தைரியம் சொல்கிறார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜன.17 (திங்கட்கிழமை) பொது விடுமுறை!

இங்கே இருந்து போன பின் சத்திய நாராயணன் பூஜை இருக்கிறது. அதில் இருவரும் ஒன்றாக அமர வேண்டும் அதன் பின் எல்லாம் சரியாகிவிடும் நீ தைரியமாக இரு என சொல்கிறார். கண்ணம்மா வீட்டிற்கு வர பாரதி அங்கே அமர்ந்து இருக்கிறார். காபி கொடுக்கவா என கண்ணம்மா கேட்க வேண்டாம் என பாரதி சொல்கிறார். கண்ணம்மா கோவிலில் நடந்தது பற்றி நாம பேச கூடாது என நினைக்கிறார். பாரதி இப்பவே இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என நினைக்கிறார்.

கண்ணம்மாவிடம் நான் இங்கே இருந்து கிளம்ப போகிறேன் நாளைக்கு இங்கே இருக்க மாட்டேன் என சொல்கிறார். உங்களுக்கு என்ன தான் பிரச்சனை என்னுடைய ஒழுக்கம் என் நேர்மையை சந்தேகப்பட்டு இருக்கீங்க, நீங்க தான ஒரு கோவிலுக்கு கூட்டிக் கொண்டு போனீங்க ஆனால் அங்கே அந்த அம்மன் எனக்கு தான நீதி கொடுத்தார் ஆனாலும் புரிந்து கொள்ளவில்லை.

அப்போ அந்த அம்மன் வந்து சொன்னால் கூட என்னை நம்பமாட்டாய் அப்போ நான் எப்படி தான் வாழ முடியும் என கேட்க, கண்ணால் பார்ப்பதை விட என் மனசுக்கு தோன்றிய நீதி படி தான் நடக்க முடியும் என சொல்கிறார். கண்ணம்மா அழுது கொண்டே 8 வருசமா எப்படி இருந்தீங்களோ அப்படி தான் இப்போதும் இருக்கீங்க என கேட்கிறார். நான் அமைதியாக கிளம்பி போக நினைக்கிறேன் என சொல்கிறார். கண்ணம்மா அழுது கொண்டே சுவற்றில் முட்டிக் கொள்கிறார். அதை பார்த்து பாரதி வருத்தப்படுகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!