தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜன.17 (திங்கட்கிழமை) பொது விடுமுறை!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஜன.17 (திங்கட்கிழமை) பொது விடுமுறை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - ஜன.17 (திங்கட்கிழமை) பொது விடுமுறை!
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜன.17 (திங்கட்கிழமை) பொது விடுமுறை!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த ஜன.14ம் தேதி முதல் ஜன.16ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜன.17ம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை விடுமுறை:

தமிழகத்தில் கடந்த ஜன.14ம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த ஜன.14, 15 மற்றும் 16ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜன.14ம் தேதி பொங்கல் பண்டிகை, 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 16ம் தேதி உழவர் திருநாள் ஆகிய தினங்களை முன்னிட்டு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஜன.18ம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டு அன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஜன.17ம் தேதி மட்டும் வேலைநாளாக இருந்தது வெளியூர் சென்று வேலை பார்க்கும் அனைவருக்கும் சற்று மனவருத்தத்தை அளிக்கும் விதமாக அமைந்தது.

TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – ரூ.1.19 லட்சம் சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதனால் அரசு ஊழியர்கள் ஜன.17ம் தேதி விடுமுறை அளிக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு தமிழகம் முழுவதும் வரும் 17ம் தேதி திங்கள் கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. அதாவது ஜன.16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும், ஜன.18ம் தேதி தைப்பூச விழா அரசு விடுமுறை என்பதாலும், இடைப்பட்ட நாளான ஜன.17 அன்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இத்தகைய அறிவிப்பு அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!