சௌந்தர்யாவை சந்திக்க வந்த கல்லூரி தோழன் விக்ரம், வெண்பாவை பயமுறுத்தும் போன் கால் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
சௌந்தர்யாவை சந்திக்க வந்த கல்லூரி தோழன் விக்ரம், வெண்பாவை பயமுறுத்தும் போன் கால் - இன்றைய
சௌந்தர்யாவை சந்திக்க வந்த கல்லூரி தோழன் விக்ரம், வெண்பாவை பயமுறுத்தும் போன் கால் - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
சௌந்தர்யாவை சந்திக்க வந்த கல்லூரி தோழன் விக்ரம், வெண்பாவை பயமுறுத்தும் போன் கால் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா ஹேமா சொன்னதை நினைத்து வடிவிடம் சொல்லி கவலைப்படுகிறார். இது சாதாரண விஷயம் தான என வடிவு சொல்ல கண்ணம்மா அதை ஏற்றுக் கொள்கிறார். சௌந்தர்யாவிற்கு மெசேஜ் வந்தது விக்ரம் வேணுவின் புதிய திட்டமாக இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா வடிவை கூப்பிட என்ன கண்ணம்மா என்னமோ பேச வேண்டும் என கேட்டாய் என கேட்கிறார். அப்போது கண்ணம்மா எல்லாம் ஹேமா பற்றி தான் அவள் பல தடவை என் அப்பாவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என சொல்கிறாள். நான் என்ன செய்வது என கண்ணம்மா கேட்க இதெல்லாம் பெரிய பிரச்சனையா என வடிவு கேட்கிறார். இப்போது இந்த விஷயம் ஹேமா டீச்சர் வரை சென்றுவிட்டது என கண்ணம்மா சொல்கிறார். பின் வடிவு இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை நீ தான் இதை பெரிதாக நினைக்கிறாய் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் அகில் அஞ்சலி வேணு சௌந்தர்யா இருக்க ஹேமா வந்து உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என சொல்கிறார். அப்போது சௌந்தர்யா என்னதுமா என கேட்க ஹேமா பாரதி கண்ணம்மா உடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றை காட்டுகிறார். அப்போது சௌந்தர்யா அதை பார்த்து சந்தோசப்பட அனைவரும் அந்த புகைப்படத்தை பார்த்து சந்தோசமாக இருக்கின்றனர். பின் சௌந்தர்யா இதை மாட்ட வேண்டாம் என சொல்ல, நாம எல்லாரும் சேர்ந்து ஒரு குடும்ப புகைப்படம் எடுக்க வேண்டும் என சொல்கிறார். அதெல்லாம் சீக்கிரமாக நடக்கும் என வேணு சொல்கிறார்.

பின் சௌந்தர்யாவிற்கு மீண்டும் புது நம்பரில் இருந்து மெசேஜ் வருகிறது. அதில் சௌந்தர்யாவிடம் டியர் என பேச சௌந்தர்யா நான் யார் என தெரியாமல் என்னிடம் விளையாடிக் கொண்டிருக்கிறார் என சொல்கிறார். பின் நேரில் பார்க்கலாமா என கேட்க சரி அவனை நேரில் பார்த்து போலீசில் பிடித்துக் கொடுக்கலாம் என கிளம்புகிறார். வேணு நானும் வெளியே போகிறேன் என சொல்ல நான் கோவிலுக்கு போகிறேன் என சௌந்தர்யா சொல்கிறார். மறுபக்கம் வெண்பாவிற்கு போன் வர சாந்தி போனை கொடுக்கிறார். ஆனால் வெண்பா பதட்டம் அடைந்து பேசாமல் இருக்க போனை ஆப் செய்கிறார். சாந்தி யார் என கேட்க அவர் சொல்லவில்லை. பின் அவன் சொன்ன காபி சாப் வர அங்கே சௌந்தர்யா அவன் அருகே சென்று பார்க்கிறார். அது வேறு யாருமில்லை சௌந்தர்யாவின் கல்லூரி தோழன் விக்ரம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணி வீட்டை பார்த்து அசந்து போன ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!

அவரை பார்த்து சௌந்தர்யா சந்தோசப்பட நீ இல்லாமல் இருந்தால் இந்நேரம் போலீசில் புடித்து கொடுத்திருப்பேன் என சொல்கிறார். அப்போது வேணு வும் அங்கே வர சௌந்தர்யா நீங்க இருவரும் போட்ட திட்டம் தான என கேட்கிறார். பின் சௌந்தர்யா எப்போது அமெரிக்காவில் இருந்து வந்த என கேட்க அங்கே இருந்தது எல்லாம் போதும் என தோன்றியது அதனால் தான் வந்தேன் என சொல்கிறார். பின் குடும்பம் எப்படி இருகாங்க என கேட்க எனக்கு கல்யாணம் ஆகவில்லை கல்யாணம் செய்ய தோணவில்லை என சொல்கிறார். அதனால் என்ன பெரிய குடும்பம் எங்க வீட்டில் இருக்கிறது என வேணு சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!