மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி, கண்ணம்மா – விஜய் டிவி “ஸ்டார்ட் மியூசிக்” நிகழ்ச்சியால் ரசிகர்கள் உற்சாகம்!

0
மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி, கண்ணம்மா - விஜய் டிவி
மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி, கண்ணம்மா - விஜய் டிவி "ஸ்டார்ட் மியூசிக்" நிகழ்ச்சியால் ரசிகர்கள் உற்சாகம்!
மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதி, கண்ணம்மா – விஜய் டிவி “ஸ்டார்ட் மியூசிக்” நிகழ்ச்சியால் ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவியில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘ஸ்டார்ட் மியூசிக்’ சீசன் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதில் பாரதியும், கண்ணம்மாவும் தொட்டால் பூ மலரும் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளனர்.

ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி:

விஜய் தொலைக்காட்சிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் ஒன்றான பிரபலங்கள் கலந்து கொள்ளும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்கினார். ஆனால் தற்போது அவர் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டுள்ளதால் அந்த சீசன் முடிக்கப்பட்டு ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 என புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டு அதை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்.

“பாரதி கண்ணம்மா” வில்லி வெண்பா இன்ஸ்டாவில் செய்த சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் முதன் முதலில் சூப்பர் சிங்கர் 8 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த வாரம் பாரதி கண்ணம்மா நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கண்ணம்மா, பாரதி, அஞ்சலி, அகில், வேணு, சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். சீரியலில் அவர்களை மாறுபட்ட கதாபாத்திரத்தில் பார்த்தாலும், இந்த நிகழ்ச்சியில் ஒற்றுமையாக இருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விவாகரத்திற்கு பிறகு புதிய தமிழ் படத்தில் கமிட் ஆன சமந்தா – ரசிகர்கள் உற்சாகம்!

மேலும் பாரதியாக நடிக்கும் அருண் மற்றும் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி மட்டுமல்லாமல் அகில் மற்றும் அஞ்சலி இணைந்து தொட்டால் பூ மலரும் பாடலுக்கு நடனம் ஆடி உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பின் பாரதி மற்றும் கண்ணம்மாவின் காதல் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். மேலும் அதில் மாகாபா காமெடியும் ரசிக்கும் தன்மையுடன் இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!